Photo of Melapalaiyam Brinjal Salna by Asiya Omar at BetterButter
598
3
0.0(0)
0

Melapalaiyam Kathirikai Aanam

Oct-01-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

Melapalaiyam Kathirikai Aanam செய்முறை பற்றி

பாரம்பரியமாக விஷேசம் என்றால் எங்கள் ஊரில் வெறுஞ்சோறு,கறியாணம்,கத்திரிக்காய் ஆணம் இவற்றை மதிய உணவாக பரிமாறும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. கலத்தில் சோறு வைத்து நடுவில் மட்டன் வைத்து சுற்றி மட்டன் சால்னா விட்டு முதலில் வரும். அடுத்து சோறு வைத்து சாப்பிடும் பொழுது இந்த கத்திரிக்காய் ஆணம் தான் விடுவார்கள்.செமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கத்திரிக்காய் - 1/4 கிலோ
  2. புளி - எலுமிச்சை அளவு
  3. வீட்டு குழம்பு மசாலாத்தூள் -1 -2 மேஜைக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  5. நறுக்கிய பெரிய வெங்காயம்-1
  6. நறுக்கிய தக்காளி -1
  7. பச்சை மிளகாய் -2
  8. நறுக்கிய மல்லி,கருவேப்பிலை
  9. உப்பு தேவைக்கு.
  10. இறுதியாக சேர்க்க வடி கஞ்சி -1 கப்
  11. அல்லது அரிசி மாவு 1 மேஜைக்கரண்டி
  12. தாளிக்க:-
  13. எண்ணெய் -1 -2 மேஜைக்கரண்டி
  14. கடுகு,உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  15. வெந்தயம் - கால் தேக்கரண்டி
  16. மிளகாய் வற்றல்-2
  17. கருவேப்பிலை 2 இணுக்கு
  18. நறுக்கிய வெங்காயம் - 2 மேஜைக்கரண்டி.

வழிமுறைகள்

  1. வெள்ளைக் கத்திரிக்காய் நீள் வாக்கில் துண்டாக நறுக்கி அலசி எடுத்து வைக்கவும்.அல்லது அரிசி கழைந்த நீரில் போட்டு வைக்கவும்.மற்ற எல்லாம் நறுக்கி தயாராய் வைக்கவும்.
  2. குக்கரில் ஒரு கப் தண்ணீர்,நறுக்கிய கத்திரிக்காய்,வெஞ்காயம்,தக்காளி,மிளகாய்,மல்லி இலை,இஞ்சி பூண்டு விழுது,மசாலாத்தூள்,சேர்த்து கலந்து கொதி வரும்.
  3. தேவைக்கு,உப்பு,புளிக்கரைசல் சேர்த்து மூடி விசில் போட்டு ஒன்று அல்லது இரண்டு விசில் வரவும் அணைக்கவும்.
  4. ஆவியடங்கியவுடன் திறந்து சோறு வடித்த கஞ்சி தேவைக்கு ஒரு கப் அளவு விடவும்.கஞ்சி இல்லையெனில் 1 மே.க.அரிசி மாவை தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்க வைக்கவும்.உப்பு தேவைக்கு பார்த்து சேர்க்கவும்.
  5. நன்கு கொதி வரவும்,அடுப்பை அணைத்து விட்டு மேலே தாளித்து கொட்ட வேண்டும்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் விடவும்,கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம்,மிளகாய் வற்றல்,கருவேப்பிலை சேர்க்கவும்,வெடித்து வரும் பொழுது நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவற வதக்கி கொட்டவும்.
  7. சுவையான மேலப்பாளையம் கத்திரிக்காய் ஆணம் தயார்.இதனை வெறுஞ்சோறுவுடன் பரிமாற வேண்டும். நெய்ச்சோறு என்றால் வெந்த பருப்பு சேர்த்து கலந்து கொதிக்க விட்டு தாளிக்க வேண்டும்,கஞ்சி அல்லது அரிசி மாவு கரைத்து சேர்க்க வேண்டாம்,

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்