வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாட்டு வெள்ளை அப்பம் மற்றும் மிளகாய் துவையல்

Photo of Chettinadu White appam with Red Chutney by Juvaireya R at BetterButter
990
1
5.0(0)
0

செட்டிநாட்டு வெள்ளை அப்பம் மற்றும் மிளகாய் துவையல்

Oct-01-2018
Juvaireya R
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாட்டு வெள்ளை அப்பம் மற்றும் மிளகாய் துவையல் செய்முறை பற்றி

உணவுக்கே பெயர்ப்போன செட்டிநாடு என்றழைக்கபடும் காரைக்குடி வட்டாரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சி விருந்திலும் தவறாமல் இடம் பெறும் சிற்றுண்டி வெள்ளைஅப்பம் அதற்க்கு தொட்டுக்கொள்ள மிளகாய்துவையல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி -100 கிராம்
  2. உளுந்து 2 தேக்கரண்டி
  3. உப்பு தேவையான அளவு
  4. கால் கப் சின்ன வெங்காயம்
  5. ஏழு வரமிளகாய்
  6. சிறிதளவு புளி
  7. இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய்
  8. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  9. கடுகு கால் தேக்கரண்டி
  10. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசி மற்றும் உளுந்தம் பருப்பை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்
  2. அதில் நீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. இரண்டு மணிநேரம் கழித்து அந்த நீரை வடித்து விட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்
  4. சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்
  5. அரைத்த மாவில் சிறிது உப்பு சேர்க்க வேண்டும்
  6. ஒரு கடாயில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்
  7. எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை அதில் ஊற்றவும்
  8. அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும்
  9. அப்பம் உப்பி வரும் பொழுது மறுபக்கம் திருப்பி விட வேண்டும்
  10. திருப்பிய அப்பத்தை ஓரிரு வினாடிகளில் கரண்டியின் உதவியால் எண்ணையை வடித்து தட்டுக்கு மாற்றி கொள்ளவும்
  11. இதே போல் அனைத்து மாவையும் வெள்ளை அப்பம் செய்து கொள்ளவும்.
  12. மின் கலவையில் வெங்காயம் வரமிளகாய் புளி மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் இட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
  13. அரைத்த துவையலை தாளிக்க வேண்டும்
  14. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  15. பின்பு அரைத்த மிளகாய் துவையலையும் போட்டு 2 நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்
  16. சூடான வெள்ளை அப்பத்துக்கு மிளகாய் துவையல் அருமையாதாக இருக்கும்
  17. செட்டிநாட்டு பிரசித்தி பெற்ற வெள்ளைப் பணியாரம் மற்றும் மிளகாய் துவையல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்