வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாட்டு கந்தரப்பம்

Photo of Chettinadu Gantharappam by Juvaireya R at BetterButter
235
1
0.0(0)
0

செட்டிநாட்டு கந்தரப்பம்

Oct-01-2018
Juvaireya R
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாட்டு கந்தரப்பம் செய்முறை பற்றி

செட்டிநாடு என்றழைக்கப்படும் காரைக்குடி வட்டாரத்தில் மிகவும் பிரபலமான கந்தரப்பம் அனைத்து சுபவிருந்துகளில் இடம்பெறும்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி 100 கிராம்
  2. உளுந்து 2 தேக்கரண்டி
  3. தேங்காய்த்துருவல் 2 தேக்கரண்டி
  4. அச்சு வெல்லம் 2
  5. உப்பு சிறிதளவு
  6. ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  7. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் உளுந்தை கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. இரண்டு மணி நேரம் கழித்து அரிசி மற்றும் உளுந்து கலவையை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்
  3. நன்றாக அரைத்த பின்பு அச்சு வெல்லத்தை தட்டி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்
  5. கடாயில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்
  6. எண்ணெய் காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்
  7. அப்பம் உப்பி மேலே வரும்பொழுது மறுபக்கம் திருப்பி விடவும்
  8. நன்கு தங்க நிறத்திற்கு அப்பம் மாறியதும் எண்ணெயை வடிகட்டி தட்டிற்கு மாற்றவும்
  9. சுவையான செட்டிநாட்டு கந்தரப்பம் தயார்
  10. இதேபோல் ஒவ்வொன்றாக அனைத்து மாவிலும் அப்பம் செய்துக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்