வீடு / சமையல் குறிப்பு / கேரளா இறைச்சி புட்டு

Photo of Kerala meat puttu by Benazer Abdul Kader at BetterButter
561
1
0.0(0)
0

கேரளா இறைச்சி புட்டு

Oct-01-2018
Benazer Abdul Kader
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரளா இறைச்சி புட்டு செய்முறை பற்றி

இறைச்சியை புட்டு மாவு கூடு சேர்த்து வேக வைப்பதால் அதன் மணம் புட்டு மாவின் உள்ளே ஊடுருவி அதன் சுவை அபாரமாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கேரளா
  • பிரெஷர் குக்
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புட்டு செய்ய:
  2. அரிசி மாவு 2 கப்
  3. தண்ணீர் ஒன்றரை கப்
  4. தேங்காய் 1 கப்
  5. உப்பு தேவையான அளவு
  6. இறைச்சி செய்ய:
  7. பீப் அரை கிலோ
  8. வெங்காயம் 2
  9. பச்சை மிளகாய் 2
  10. கருவேப்பிலை 4 கொத்து
  11. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி
  12. இஞ்சி துருவியது ஒரு தேக்கரண்டி
  13. பூண்டு துருவியது 5
  14. மிளகாய் பொடி ஒன்றரைத் தேக்கரண்டி
  15. மல்லி பொடி ஒரு தேக்கரண்டி
  16. தனியா தூள் கால் தேக்கரண்டி
  17. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  18. கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
  19. நல்ல மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  20. எலுமிச்சைச் சாறு 2 டீஸ்பூன்
  21. உப்பு தேவையான அளவு
  22. தேங்காய் எண்ணெய் 4 டீஸ்பூன்
  23. ஏலக்காய்-2
  24. பட்டை ஒரு இன்ச் துண்டு
  25. கிராம்பு-3

வழிமுறைகள்

  1. புட்டு செய்ய:
  2. புட்டு மாவை ஒரு பாத்திரத்தில் பரப்பவும்
  3. தண்ணீரில் தேவையான அளவு உப்பு கலந்து கொள்ளவும்
  4. சிறுது சிறுதாக தண்ணீரை மாவில் ஊற்றி பிசிறவும்
  5. மாவு பிசையும்போது உருண்டு உருண்டு வரும்போது தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தி கையால் பிடித்து பார்க்கவும்.
  6. பின்னர் புட்டு மாவை தனியாக எடுத்து வைக்கவும்
  7. இறைச்சி செய்ய:
  8. இறைச்சியை நன்கு சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், மல்லித் தூள், கரம் மசாலா, நல்ல மிளகுத்தூள், கருவேப்பிலை, 1 நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு கிளறி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  9. பின்னர் இதனை குக்கரில் கன்றாக இருந்தால் நான்கு விசிலும் முதிர்ச்சியான இறைச்சியாக இருந்தால் எட்டு விசிலும் வேகவைக்கவும்.
  10. பின்னர் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு அதில் கிராம்பு, ஏலக்காய் பட்டை, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  11. வதங்கியதும் வேக வைத்த இறைச்சியை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடங்கள் வேக விடவும்.
  12. வெந்ததும் தேங்காய் எண்ணெய் விட்டு அதனை கிளறி கருவேப்பிலை போட்டு கிளறி இறக்கவும்.
  13. இப்போது புட்டுக் குழலில் ஒரு ஸ்பூன் தேங்காய் போட்டு அதன் மீது 3 ஸ்பூன் புட்டு மாவு போட்டு மீண்டும் ஒரு ஸ்பூன் தேங்காய் போட்டு அதன் மீது இறைச்சி 2 ஸ்பூன் வைக்கவும்
  14. மேல் குறிப்பிட்டுள்ளதை புட்டுக் குழல் நிறையும் வரை மீண்டும் மீண்டும் செய்யவும்.
  15. இப்போது இதனை ஆவியில் 15 நிமிடங்கள் வைத்து வேக வைத்து எடுக்கவும்
  16. சுவையான இறைச்சி புட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்