வீடு / சமையல் குறிப்பு / மட்டன் தக்கடி

Photo of Rice with Mutton Dumplings by Nazeema Banu at BetterButter
498
2
4.0(0)
0

மட்டன் தக்கடி

Oct-01-2018
Nazeema Banu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் தக்கடி செய்முறை பற்றி

முகவை மாவட்டம் கீழக்கரையில் பிரபலமான சுவையான சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொழுக்கட்டைக்கு
  2. தேவையானவை
  3. வறுத்த பச்சரிசி மாவு இரண்டு கப்
  4. தேங்காய் துருவல் ஒரு கப்
  5. பெ.வெங்காயம் இரண்டு
  6. ப.மிளகாய் இரண்டு
  7. உப்பு தே.அளவு
  8. மட்டன் குழம்புக்கு
  9. தேவையானவை
  10. எலும்பு மட்டன் அரை கிலோ
  11. இஞ்சி பூண்டு விழுது இரண்டு டே.ஸ்பூன்
  12. தக்காளி விழுது அரை கப்
  13. வெங்காய விழுது அரை கப்
  14. ப.மிளகாய் இரண்டு
  15. கீழை கறி மசாலா இரண்டு டே.ஸ்பூன்
  16. ஆயில் தே.அளவு
  17. உப்பு தே.அளவு
  18. ம.தூள் அரை ஸ்பூன்
  19. மி.தூள் அரை ஸ்பூன்
  20. தேங்காய் ஒன்று

வழிமுறைகள்

  1. மட்டன் குழம்பு.தேங்காயை துருவி முதல் பால் ஒரு கப் இரண்டாம் பால் மூன்று கப் எடுக்கவும்.
  2. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காய விழுது தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் ப.மிளகாம் இ.பூண்டு விழுது ம.தூள்.மி.தூள் உப்பு சேர்த்து கிளறவும்.
  4. அதனுடன் மட்டனை சேர்த்து இரண்டாம் பால்ஒரு கப் சேர்த்து குக்கரை மூடவும்
  5. மூன்று அ நான்கு விசில் வைத்து கறியை வேக விடவும்.
  6. பிறகு அதில் கீழை மசாலா பொடி சேர்த்து மீதி தே.பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  7. இந்த குழம்பில் அரை கப் எடுத்து கொழுக்கட்டை பிசைய தனியே வைக்கவும்.
  8. சிறு தீயில் கறிக்குழம்பை வைத்து இறக்கவும்.
  9. கொழுக்கட்டை‌ செய்ய.தேங்காய் துருவலை வறுத்த ப.அரிசி மாவுடன் சேர்க்கவும்.
  10. அதனுடன் உப்பு ப.மிளகாய்.வெங்காயம் அரிந்து போடவும்.
  11. அதில் முன்பு எடுத்து வைத்த அரை கப் கறி குழம்பை தெளித்து பிசிறவும்.
  12. அவற்றை ஒன்று சேர்த்து கொழுக்கட்டை உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேக ஸைக்கவும்.
  13. குக்கரில் இருக்கும் குழம்பை அகல சட்டியில் மாற்றி சிறு கொதியிலே வைத்து வெந்த கொழுக்கட்டைகளை குழம்பில் போடவும்.
  14. கொழுக்கட்டைகள் குழம்பில் வெந்து மசாலா உடன் சேர்ந்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்