வீடு / சமையல் குறிப்பு / கும்மியாணம் ( நெல்லை மற்றும் குமரி மாவட்ட ஸ்பெஷல் )

Photo of Kummiyanam( Nellai and Kanyakumari District Special) by Sowmya Sundar at BetterButter
1246
2
0.0(0)
0

கும்மியாணம் ( நெல்லை மற்றும் குமரி மாவட்ட ஸ்பெஷல் )

Oct-02-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கும்மியாணம் ( நெல்லை மற்றும் குமரி மாவட்ட ஸ்பெஷல் ) செய்முறை பற்றி

நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் பிரபலமான பதார்த்தம் இது. பயறு வகைகள் மற்றும் கருப்பட்டி சேர்த்து செய்வதால் மிகவும் சத்தானது .ஆடி மாதத்தில் முன்னோரை வழிபட்டு செய்வார்கள் . குழந்தைகளுக்கு நாம் வாரம் தோறும் கூட செய்து கொடுக்கலாம் .காலை நேரத்தில் அனைவருக்கும் செய்து தரலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சைபயறு 2 டேபிள் ஸ்பூன்
  2. சிவப்பரிசி 2 டேபிள் ஸ்பூன்
  3. மொச்சை 1 டேபிள் ஸ்பூன்
  4. கொள்ளு 1 டேபிள் ஸ்பூன்
  5. கருப்பு உளுந்து 1 டேபிள் ஸ்பூன்
  6. கருப்பட்டி 3/4 கப்
  7. ஏலக்காய் பொடி 1/2 டீஸ்பூன்
  8. சுக்கு பொடி 1/8 டீஸ்பூன்
  9. நெய் 1 டீஸ்பூன்
  10. முந்திரி பருப்பு 6

வழிமுறைகள்

  1. வறுக்க தேவையான பொருள்கள் அனைத்தும் எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. வெறும் கடாயில் அரிசி மற்றும் தானிய வகைகளை தனித்தனியாக சேர்த்து நன்றாக சிவக்க வறுத்து கொள்ளவும்
  3. அனைத்தும் சேர்த்து மிக்சியில் ரவை பதத்திற்கு பொடித்து கொள்ளவும்
  4. குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு அரைத்ததை சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  5. கருப்பட்டியில் கால் கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு வடிகட்டி வேக வைத்த தானியத்தில் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு திக்கானதும் சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் சேர்த்து இறக்கவும்
  6. நெய்யில் முந்திரி பருப்பு வறுத்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்