வீடு / சமையல் குறிப்பு / மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா (திண்டுக்கல் ஸ்பெஷல் )

Photo of Mutton white kuruma  (Dindigul Special ) by Bena Aafra at BetterButter
662
1
0.0(0)
0

மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா (திண்டுக்கல் ஸ்பெஷல் )

Oct-02-2018
Bena Aafra
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா (திண்டுக்கல் ஸ்பெஷல் ) செய்முறை பற்றி

எங்க ஊரு சுவையான மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா. ....மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஒரு உணவு. ......ஸ்பெஷல் உணவு. ....இவை தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்ற உணவுகளுக்கு சாப்பிட உகந்தது. ......

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் இறைச்சி -1கிலோ
  2. பெரிய வெங்காயம் -2
  3. பூண்டு பல் -4
  4. தக்காளி -2
  5. பச்சை மிளகாய் -2
  6. கொத்தமல்லித்தழை -சிறிதளவு
  7. உப்பு - தேவைக்கேற்ப
  8. தோசை மாவு -1 கரண்டி
  9. மசாலா அரைக்க ::
  10. வேர்க்கடலை பருப்பு -3ஸ்பூன்
  11. பொட்டுக்கடலை -3ஸ்பூன்
  12. தேங்காய் துருவல் -3ஸ்பூன்
  13. மிளகு -1ஸ்பூன்
  14. தாலிப்பதற்கு ::
  15. பட்டை -1
  16. ஏலக்காய் -2
  17. மிளகு -சிறிதளவு
  18. எண்ணெய் -தேவைக்கேற்ப
  19. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. முதலில் மட்டன் இறைச்சி -ஐ சுத்தம் செய்து வைத்து கொள்ளவேண்டும்.
  2. வெங்காயம், பூண்டு ,தக்காளி,இவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  3. பச்சை மிளகாய் கீறி வைத்து கொள்ளவும்.
  4. கொத்தமல்லித்தழை சிறிதளவு நறுக்கி கொள்ளவும்.
  5. பிறகு அடுப்பில் குக்கர் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும்.
  6. எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்திருந்த வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  7. கொத்தமல்லித்தழை,பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  9. நன்றாக வதங்கியதும் மட்டன் இறைச்சி -ஐ சேர்த்து கிளறி விடவும்.
  10. பிறகு தண்ணீர் சேர்த்து குக்கர் -ஐ மூடி வைத்து 4 அல்லது 5 விசில் விடவும்.
  11. வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகு -சிறிது , தேங்காய் துருவல் சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும்.
  12. மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
  13. அரைத்த பேஸ்டுடன் ஒரு கரண்டி தோசை மாவு சேர்த்து கொள்ளவும்.
  14. தோசை மாவு சேர்த்து கலக்கி வைக்கவும்.
  15. பிறகு இந்த கலவையை மட்டனுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
  16. உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.
  17. அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். அடிக்கடி அடிப்பிடிக்காமல் கிண்டிவிடவும்.
  18. பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலம், மிளகு, கறிவேப்பிலை, சேர்த்து, தாலிக்கவும்.
  19. தாலித்து மட்டன் குருமாவில் சேர்த்து கிளறி விட்டு ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்கவும்.
  20. சூடான சுவையான மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்