வீடு / சமையல் குறிப்பு / நெல்லை ஏர்வாடி மட்டன் வெள்ளை குருமா

Photo of Nellai Eruvadi Mutton White Kurma by Fathima Sujitha at BetterButter
1191
2
0.0(0)
0

நெல்லை ஏர்வாடி மட்டன் வெள்ளை குருமா

Oct-02-2018
Fathima Sujitha
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நெல்லை ஏர்வாடி மட்டன் வெள்ளை குருமா செய்முறை பற்றி

மிளகாய்பொடி, மஞ்சள் தூள், இல்லாமல் தயிர், இஞ்சிப்பூண்டு, மிளகாய் ஆகியவற்றுடன் முந்திரி பருப்பு மற்றும் கசகசா ,தேங்காய் ஆகியவற்றை அரைத்து சேர்த்து பிரத்யேக முறையில் சமைக்கும் உயர்தர உணவு ...!!!

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆட்டு கறி - 1/2 கிலோ
  2. இஞ்சி பூடு விழுது - 1 டீஸ்பூன்
  3. வெங்காயம் - 4
  4. தக்காளி - 1 (அதிகம் சேர்க்க கூடாது)
  5. பச்சை மிளகாய் - 10
  6. கெட்டி தயிர் - 1/2 கப்
  7. கறிவேப்பில்லை கொத்தமல்லி புதினா - சிறிதளவு
  8. பட்டை -1
  9. கிராம்பு - 3
  10. ஏலக்காய் - 4
  11. ரம்பை இலை - 1
  12. தேங்காய் - 1
  13. முந்திரி, - சிறிதளவு
  14. கசகசா - சிறிதளவு
  15. நெய் - தேவையான அளவு
  16. எண்ணெய் - தேவையான அளவு
  17. உப்பு - தே.அ

வழிமுறைகள்

  1. மட்டனை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  2. தேங்காய், கசகசா, முந்திரியை நன்கு மையாக அரைத்து கொள்ளவும். ( அம்மியில் அரைத்தால் ருசியும், நன்கு மையாகவும் இருக்கும்.)
  3. பச்சை மிளகாய் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். காரத்திற்கு இது மட்டும் தான் என்பதால் காரம் பார்த்து கொண்டு தேவைப்பட்டால் மேலும் சேர்த்து கொள்ளலாம்.
  4. குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, ரம்பை இலை சேர்க்கவும்.
  5. வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  6. இஞ்சி பூடு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. தக்காளி மிளகாய் கொத்தமல்லி புதினா கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  8. அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.
  9. வதங்கியதும், ஆட்டு கறி சேர்த்து உப்பு போட்டு நன்கு வேக விடவும்.
  10. வெந்ததும்,அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும்.
  11. இறுதியாக தயிர் சேர்க்கவும்.
  12. கறி வெகும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கறியை வேக வைத்து எடுக்கவும்.
  13. சுவையான பிரத்யேகமான தயாரித்த மட்டன் வெள்ளை குருமா தயார்..!!!
  14. நெய் சோறு, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம் உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்