வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி அல்வா

Photo of Thirunelveli alva by sudha rani at BetterButter
830
0
0.0(0)
0

திருநெல்வேலி அல்வா

Oct-02-2018
sudha rani
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி அல்வா செய்முறை பற்றி

திருநெல்வேலி ஸ்பெஷல் அல்வா செய்வது கடினமாக இருந்தாலும் ருசியில் அபாரம் கொஞ்சம் முயற்சி செய்து செய்து பழகிட்டா சுடச்சுட ஆரோக்கியமாக சாப்பிடலாம் கண்டிப்பாக செய்து பாருங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சம்பா கோதுமை 1 கப்
  2. சர்க்கரை 2 கப்
  3. நெய் 3/4 கப்
  4. முந்திரி பருப்பு சிறிது

வழிமுறைகள்

  1. முதல் நாள் இரவே கோதுமையை சுத்தம் செய்து இரண்டு முறை அலசி பின் 2 கப் தண்ணீர் விட்டு ஊறவிடவும்
  2. மறுநாள் காலையில் அந்த தண்ணீரோடு சேர்த்து நன்கு அரைக்கவும்
  3. பின் அதனை ஒரு மஸ்லின் துணியில் பிழிந்து பால் எடுக்கவும்
  4. பின் அதை ஒரு 2 மணி நேரம் வரை அப்படியே வைத்தால் பால் தனியாகவும் தண்ணீர் தனியாகவும் பிரிந்து இருக்கும்
  5. பின் அந்த தண்ணீரை வடிகட்டி பாலை கரண்டியால் நன்கு கட்டியில்லாமல் கலந்து வைக்கவும்
  6. வாணலியில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் இல்லாமல் கேரமல் கலர் வரும் வரை கிளறவும்
  7. பின் அடுப்பை அணைத்து விட்டு கோதுமை பாலை ஊற்றி நன்கு கலக்கவும்
  8. பின் அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் கிளறவும் நன்கு கலந்து இளகி கட்டியில்லாமல் வரும் போது நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து தொடர்ந்து கிளறவும்
  9. ஊற்றிய நெய் முதலில் இழுத்து பின் கசியும் அதுவரை நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து தொடர்ந்து கிளறவும்
  10. கையில் தொட்டு உருட்டினால் ஒட்டாமல் உருட்ட வருவது பதம்
  11. பின் இறக்கி நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்