சிறு தினை மற்றும் பல தானிய முளைகள் பணியாரம் | Little Millet n Multi Grain Sprouts Paniyaram in Tamil

எழுதியவர் Kalpana V Sareesh  |  25th Aug 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Little Millet n Multi Grain Sprouts Paniyaram by Kalpana V Sareesh at BetterButter
சிறு தினை மற்றும் பல தானிய முளைகள் பணியாரம்Kalpana V Sareesh
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

2656

0

Video for key ingredients

  • Sambhar Powder

சிறு தினை மற்றும் பல தானிய முளைகள் பணியாரம் recipe

சிறு தினை மற்றும் பல தானிய முளைகள் பணியாரம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Little Millet n Multi Grain Sprouts Paniyaram in Tamil )

  • 1 கப் - சாமை (சிறு தினை)
  • 1 கப் - பல தானிய முளைகள்
  • 1/2 கப் - பழுப்பரிசி
  • 2 தேக்கரண்டி - துவரம் பருப்பு
  • 2 தேக்கரண்டி - கடலை பருப்பு
  • 1 தேக்கரண்டி - சீரகம்
  • 1/2 தேக்கரண்டி - கருப்பு மிளகு
  • 2 எண்ணிக்கை - பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி - இஞ்சி
  • 1 தேக்கரண்டி - உப்பு (அல்லது தேவைகேற்ற அளவு)
  • 1/4 தேக்கரண்டி - பெருங்காயத்தூள் (ஹிங்)

சிறு தினை மற்றும் பல தானிய முளைகள் பணியாரம் செய்வது எப்படி | How to make Little Millet n Multi Grain Sprouts Paniyaram in Tamil

  1. உப்பு பெருங்காயத்தைத் தவிர மேலுள்ள எல்லாவற்றையும் 2 மணி நேரத்திற்கு ஊறவைத்தபிறகு சிறிதளவு தண்ணீர் (தோராயமாக 1/4 கப் அல்லது அதற்கும் குறைவாக) சேர்த்தபடி கரமுரடான மாவாக அரைக்கவும்.
  2. மாவு ஊற்றும் பதத்திற்கு இருக்கவேண்டும் தண்ணீர் போல் இல்லாமல்.
  3. ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு உப்பையும் பெருங்காயத்தையும் சேர்த்து நன்கு கலந்து, இரண்டு மணிநேரம் அப்படியே விட்டுவிடவேண்டும்.
  4. பணியார பாத்திரத்தில் (ஆப்பப் பாத்திரம்) ஊற்றி இரண்டு பக்கமும் சன்னமானப் பொன்னிறம் வருவம்வரை சமைக்கவேண்டும்.
  5. சட்னி மற்றும் சாம்பாருடன் சூடாகப் பரிமாறுக.

Reviews for Little Millet n Multi Grain Sprouts Paniyaram in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.