வீடு / சமையல் குறிப்பு / தஞ்சை ஸ்பெஷல் தவலை அடை

Photo of Tanjai special tavala adai by Lakshmi Priya at BetterButter
514
2
0.0(0)
0

தஞ்சை ஸ்பெஷல் தவலை அடை

Oct-03-2018
Lakshmi Priya
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தஞ்சை ஸ்பெஷல் தவலை அடை செய்முறை பற்றி

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரை மணி நேரம் ஊறவைத்து காயவைத்து பொடித்து கொள்ளவும் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து அனைத்தையும் தண்ணீர் ஊற்றி பொடி அதன் மேல் போட்டு உப்பு போட்டு கிளறவும். கிளறி வைத்தவுடன் 10 நிமிடம் வரை ஊற விடவும் பின்பு அதை எடுத்து வடைபோல் தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு தோசைக்கல்லில் போட்டு நல்லெண்ணெயை ஊற்றி பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து திருப்பி விடவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இரண்டு கப் பச்சரிசி
  2. இரண்டு ஸ்பூன் துவரம் பருப்பு
  3. இரண்டு ஸ்பூன் மிளகு
  4. இரண்டு ஸ்பூன் சீரகம்
  5. கால் கப் கடலைப்பருப்பு
  6. இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  7. காய்ந்த மிளகாய் வற்றல் 3 அல்லது 4
  8. கருவேப்பிலை
  9. பெருங்காயம்
  10. உப்பு தேவையான அளவு
  11. தண்ணீர் 4 டம்ளர்
  12. நல்லெண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி மற்ற பருப்புகளை ஒன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் காய வைக்கவும்
  2. காய வைத்த அரிசி பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் ஆகியவற்றை நன்றாக ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  4. அதில் ஒரு பச்சை மிளகாய் தேவையெனில் நறுக்கி போட்டு கொள்ளலாம்
  5. அதில் உப்பை போட்டு ஒரு கொதி வந்தவுடன் அரிசி பருப்பு மற்றும் கலவையை அதில் போட்டு கிளறவும்
  6. உப்புமா பதத்திற்கு வந்த உடன் 10 நிமிடம் வரை அதை மூடி வைக்கவும்
  7. பத்து நிமிடம் கழித்து அதை உருண்டையாக உருட்டி ஒரு கையால் அடைபோல் தட்டி கொள்ளவும் அதன் நடுவில் ஓட்டை இடவும்
  8. அதை அடிகனமான வாணலியில் அல்லது அடி கனமான இரும்பு தவாவில் இட்டு நடுவில் எண்ணெய் ஊற்றி நல்லெண்ணெய் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்
  9. இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்தவுடன் அதை எடுத்து பரிமாறவும்
  10. இதற்கு தொட்டுக்கொள்வதற்கு ரசம் அல்லது கடலைப் பருப்பு தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்
  11. இதுவே தஞ்சை தவலை அடை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்