வீடு / சமையல் குறிப்பு / மதுரை பொடிமாஸ்

Photo of Madurai podi mas by Vinothini Manoharan at BetterButter
487
2
0.0(0)
0

மதுரை பொடிமாஸ்

Oct-03-2018
Vinothini Manoharan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மதுரை பொடிமாஸ் செய்முறை பற்றி

மதுரையின் ஸ்பெஷல் உருளைக்கிழங்கு பொடிமாஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு மீடியம் சைஸ் 3
  2. எண்ணெய் தேவையான அளவு
  3. கடுகு ஒரு டீஸ்பூன்
  4. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  5. சீரகம் ஒரு டீஸ்பூன்
  6. வரமிளகாய்-2
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. பூண்டு 6 பல்
  9. பெரிய வெங்காயம் ஒன்று
  10. வர மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  11. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  12. கடலை மாவு 2 டேபிள்ஸ்பூன்
  13. கொத்துமல்லி தழை சிறிதளவு
  14. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்
  2. தோல் உரித்து தனியாக ஒரு ஒன்றிரண்டாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்
  4. வாசனை வந்த பிறகு பூண்டு சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்
  5. மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளற வேண்டும்
  6. அதன் பிறகு வர மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
  7. தேவையான அளவு உப்பு சேர்த்து கடலை மாவு 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வதக்க வேண்டும்
  8. கடைசியாக கொத்துமல்லி தழை தூவி இறக்கி விட வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்