வீடு / சமையல் குறிப்பு / மேலப்பாளையம் காயம்

Photo of Melapalaiyam Kaayam by Asiya Omar at BetterButter
487
2
0.0(0)
0

மேலப்பாளையம் காயம்

Oct-04-2018
Asiya Omar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மேலப்பாளையம் காயம் செய்முறை பற்றி

பொதுவாக இந்தக்காயம் குழந்தை பெற்றவர்களுக்கு செய்து கொடுப்பதோடல்லாமல்,ஒரிரு நாள் எல்லோருக்கும் சேர்த்து செய்து பருக கொடுப்பார்கள்.இது தவிர கொப்பரை பானை நிறைய காய்ச்சி மாப்பிள்ளை வீட்டிற்குச் சீராகவும் அனுப்பிவைப்பார்கள்.எங்கள் ஊரில் இந்த பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. குழந்தை பெற்ற வீட்டில் ஸ்பெஷலாக செய்து குழந்தைக்காக காத்து இருப்பவர்கள் இந்தக்காயம் செய்து குடிக்கக் கொடுத்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மருந்து பொடி -50 கிராம்
  2. பெரிய தேங்காய் -1
  3. உளுந்து -100 கிராம்
  4. நல்ல எண்ணெய் -100 மில்லி
  5. நெய் விரும்பினால் சிறிது மேலே சேர்க்கலாம்.
  6. கருப்பட்டி -கால் கிலோ
  7. முட்டை -3

வழிமுறைகள்

  1. முதலில் வெள்ளை உளுந்தை ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
  2. கருப்பட்டியை இரண்டு கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டவும்.
  3. தேங்காய் முழுவதும் பால் எடுத்து வைக்கவும்.
  4. அடிகனமான பாத்திரத்தில் தேங்காய்ப்பாலில் மருந்து ,உளுந்து, கருப்பட்டி பாகு,நல்ல எண்ணெய் சேர்த்து கலந்து மீடியம் சிம் நெருப்பில் கைவிடாமல் காய்ச்சவும்.மருந்தும் உளுந்தும் வெந்து வரும்.
  5. முட்டையை நன்கு அடித்து தயார் ஆன காயத்தில் கொடி போல் விடவும்.
  6. அடுப்பைக் குறைத்து வைக்கவும்.முட்டை வெந்து வரும்.
  7. அடுப்பை அணைக்கும் பொழுது இனிப்பு சரிபார்க்கவும்.மேலும் தேவைப்பட்டால் தேன் சேர்க்கவும்.மேலே நெய்யும் சேர்க்கலாம்.
  8. சுவையான சத்தான காயம் தயார்.
  9. இரவு 7 மணிக்கு சாப்பிட்டு விட்டு இரவு 9 மணிக்கு இந்தக்காயம் குடித்து விட்டு பின்பு விரும்பினால் வெற்றிலையும் போட்டு விட்டு தூங்கலாம்.
  10. வேறு ஊரில் காய்ச்சுவார்களா என்று தெரியவில்லை.இந்தக்காயம் எங்கள் ஊர் ருசி தனி தான்.
  11. மருந்து பொடி செய்ய தேவையான பொருட்கள், மஞ்சள் -100 கிராம்,சாளியல் -100 கிராம்,சதகுப்பை-100 கிராம்,கருவாபட்டை -100 கிராம்,கசகசா -100 கிராம்,வெந்தயம்-25 கிராம் நன்கு நிழலில் உலர்த்தி பட்டுப்போல் திரித்து பயன்படுத்தவும். சிம்பிளாக செய்யும் முறை கீழ்கண்ட லின்க்கில் இருக்கிறது.
  12. மருந்து பொடி ரெசிப்பி பெட்டர் பட்டரில் முன்பே கொடுத்திருக்கிறேன். கீழ்கண்ட லிங்கில் ரெசிப்பி இருக்கிறது. http://www.betterbutter.in/ta/recipe/72268/peru-marunthu-podi-marunthu-podi-in-tamil
  13. பொடி செய்ய முடியாதவர்கள் மேலப்பாளையம் பஜாரில்,முகைதீன் ஸ்டோர் போன்ற கடையில் கிடைக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்