வெங்காய சமோசா | Onion Samosa | Triangle samosa in Tamil

எழுதியவர் Babitha Costa  |  1st Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Onion Samosa | Triangle samosa by Babitha Costa at BetterButter
வெங்காய சமோசாBabitha Costa
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

204

0

Video for key ingredients

    வெங்காய சமோசா recipe

    வெங்காய சமோசா தேவையான பொருட்கள் ( Ingredients to make Onion Samosa | Triangle samosa in Tamil )

    • தண்ணீர் - கொஞ்சம்
    • மைதா - 2 தேக்கரண்டி (சீல் செய்வதற்கான சாந்தைச் செய்வதற்கு)
    • எண்ணெய் - பொரிப்பதற்கு
    • சுவைக்கேற்ற உப்பு
    • சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
    • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    • சிவப்பு மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
    • நடுத்தர அளவிலான வெங்காயம் - 2
    • ரெடிமேட் சமோசா தாள்கள் - 9 தாள்கள்

    வெங்காய சமோசா செய்வது எப்படி | How to make Onion Samosa | Triangle samosa in Tamil

    1. ஒரு பாத்திரத்தில் நன்றாக நறுக்கப்பட்ட வெங்காயம், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சாட் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இது உங்கள் பூரணம். எண்ணெயில் வதக்கத் தேவையில்லை, எண்ணெயில் பொரிக்கும்போது வறுபட்டுவிடும்.
    2. இன்னொரு பாத்திரத்தில் மாவு தண்ணீர் சேர்க்கவும், பசைபோன்ற பதத்தில் தயாரிப்பதற்காக. இது முனைகளை மூடுவதற்குத் தேவைப்படும். ரெடிமேட் ஷீட்டை பிரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து தயாரிப்பதற்கு முன் அறையின் வெப்பத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் வைக்கவும்.
    3. ஒரு பாஸ்ட்ரி ஷீட்டை எடுத்து சிறிதளவு பூரணத்தை ஒரு பக்கம் வைத்து முனைக்கு முனை மாவு சாந்தைத் தடவி ஒட்டி முக்கோண வடிவத்தில் செய்துகொள்ளவும். எல்லா ஷீட்டுகளுக்கும் இதையே செய்யவும்.
    4. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி தயாரித்து வைத்துள்ள சமோசாவை விடவும். ஒரு சமயத்தில் 3 அல்லது 4 விடவும். அதிகம் வேண்டாம். நன்றாகப் பொரித்தெடுக்கவும். வெந்ததும், கூடுதல் எண்ணெயை ஒரு பேப்பர் துண்டின் உதவியோடு நீக்கிவிடவும்.
    5. கெச்சப் உடன் டீ/காபிக்கான பக்க உணவாகச் சூடாகப் பரிமாறவும்.

    எனது டிப்:

    பூரணத்திலிருந்து தண்ணீர் கசிந்தால் கொஞ்சம் அவலை அதனுடன் சேர்க்கவும், அது தண்ணீரை உறிஞ்சிவிடும். வீட்டில் தயாரிக்கப்படும் ஷீட்டுகளுக்கு: மாவு/மைதா, உப்பு, எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மெதுவாகத் தண்ணீர் சேர்த்து ஒட்டாத மாவை சப்பாத்தி மாவு போல் தயாரித்துக்கொள்ளவும். உருண்டைகள் செய்து மெல்லியத் தாளாக உருட்டி செவ்வகமாக வெட்டி சமோசாவை/ஸ்பிரிங் ரோல் பாஸ்ட்ரி தாள்களைத் தயாரிக்கவும்.

    Reviews for Onion Samosa | Triangle samosa in tamil (0)

    சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.