வீடு / சமையல் குறிப்பு / வெங்காய சமோசா

Photo of Onion Samosa | Triangle samosa by Babitha Costa at BetterButter
1729
21
0.0(0)
0

வெங்காய சமோசா

Jul-01-2016
Babitha Costa
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லாக்டோஸ் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரெடிமேட் சமோசா தாள்கள் - 9 தாள்கள்
  2. நடுத்தர அளவிலான வெங்காயம் - 2
  3. சிவப்பு மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
  6. சுவைக்கேற்ற உப்பு
  7. எண்ணெய் - பொரிப்பதற்கு
  8. மைதா - 2 தேக்கரண்டி (சீல் செய்வதற்கான சாந்தைச் செய்வதற்கு)
  9. தண்ணீர் - கொஞ்சம்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் நன்றாக நறுக்கப்பட்ட வெங்காயம், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சாட் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இது உங்கள் பூரணம். எண்ணெயில் வதக்கத் தேவையில்லை, எண்ணெயில் பொரிக்கும்போது வறுபட்டுவிடும்.
  2. இன்னொரு பாத்திரத்தில் மாவு தண்ணீர் சேர்க்கவும், பசைபோன்ற பதத்தில் தயாரிப்பதற்காக. இது முனைகளை மூடுவதற்குத் தேவைப்படும். ரெடிமேட் ஷீட்டை பிரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து தயாரிப்பதற்கு முன் அறையின் வெப்பத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் வைக்கவும்.
  3. ஒரு பாஸ்ட்ரி ஷீட்டை எடுத்து சிறிதளவு பூரணத்தை ஒரு பக்கம் வைத்து முனைக்கு முனை மாவு சாந்தைத் தடவி ஒட்டி முக்கோண வடிவத்தில் செய்துகொள்ளவும். எல்லா ஷீட்டுகளுக்கும் இதையே செய்யவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி தயாரித்து வைத்துள்ள சமோசாவை விடவும். ஒரு சமயத்தில் 3 அல்லது 4 விடவும். அதிகம் வேண்டாம். நன்றாகப் பொரித்தெடுக்கவும். வெந்ததும், கூடுதல் எண்ணெயை ஒரு பேப்பர் துண்டின் உதவியோடு நீக்கிவிடவும்.
  5. கெச்சப் உடன் டீ/காபிக்கான பக்க உணவாகச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்