Photo of Kayal Special Dammadai by Nafeesa Thahira at BetterButter
1627
8
5.0(0)
0

Kayal Special Dammadai

Oct-04-2018
Nafeesa Thahira
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • பேக்கிங்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தேங்காய் பால் - 250ml
  2. பசும்பால் - 500ml
  3. ரவை - 250 கிராம்
  4. சர்க்கரை - 350 கிராம்
  5. ஏலம் - 5 கிராம்
  6. பாதாம் - 50 கிராம்
  7. முந்திரி - 50 கிராம்
  8. பிஸ்தா - 20 கிராம்
  9. நெய் - 100 கிராம்

வழிமுறைகள்

  1. தேங்காய் பாலில் ரவையை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பாதாம்,பிஸ்தா இரண்டையும் 5 நிமிடம் வெந்நீரில் கொதிக்க வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்
  3. பாதாம்,பிஸ்தா,முந்திரி ஆகிய பருப்பு வகைகளை நீள வாக்கில் சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  4. ஏலக்காயை மிக்ஸியில் பவுடர் செய்துக்கொள்ளவும்.
  5. 3 மணி நேரம் ரவை மற்றும் தேங்காய் பால் நன்கு ஊறிய பின் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
  6. பின் அதனுடன் பால் மற்றும் நெய் ஊற்றி மீண்டும் கிளறிக் கொள்ளவும்
  7. இப்பொழுது தம்மடைக்கான மாவுக் கலவை தயார்
  8. தம்மடை கப் எடுத்து அதில் சிறிது நெய் தடவி பின் மைதா மாவு தூவி கப்பின் எல்லா பகுதியிலும் சமமாக மாவு பரவி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்ட பின் கப்பில் இருக்கும் மிதமான மாவை தட்டி எடுத்து விடவும்.
  9. இந்த தம்மடை கப்பில் தம்மடை மாவுக் கலவையை ஊற்றி மேலே பருப்பு வகைகளை தூவ வேண்டும்.
  10. இது போன்று அனைத்து கப்பிலும் ஊற்றி ஓவனில் 160 டிகிரி சூட்டில் 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  11. ஓவனை விட்டு கப்பை எடுத்து 10 நிமிடம் கழித்து தட்டி எடுக்கவும்.
  12. சுவையான தம்மடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்