வீடு / சமையல் குறிப்பு / Melapaalaiyam Marundhu Soru

Photo of Melapaalaiyam Marundhu Soru by Fathima Sujitha at BetterButter
0
2
5(1)
0

Melapaalaiyam Marundhu Soru

Oct-04-2018
Fathima Sujitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • మీడియం/మధ్యస్థ
 • ఇతర
 • తమిళనాడు
 • వేయించేవి
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. புழுங்கல் அரிசி - 1/2 கிலோ
 2. மருந்து பொடி - 2 டீஸ்பூன்
 3. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 - 4 டீஸ்பூன்
 4. பட்டை, கிராம்பு ,ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
 5. மல்லி,புதினா,கருவேப்பிலை- சிறிதளவு
 6. நல்லெண்ணய் - 100 மில்லி
 7. நெய்- 2 டேபிள்ஸ்பூன்
 8. வெங்காயம்- 100 கிராம்
 9. பச்சை மிளகாய் -3
 10. தேங்காய்பால் - பாதி பெரிய தேங்காயில் எடுத்தது
 11. உளுந்து - ஒரு கைபிடியளவு
 12. கருப்பட்டி - 50கிராம் அல்லது 2 டேபிள்ஸ்பூன் சீனி
 13. முட்டை-1
 14. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

 1. வெங்காயம்,மல்லி,புதினா நறுக்கி வைத்து கொள்ளவும்.
 2. புழுங்கல் அரிசியில் தான் பாரம்பரியமாக மருந்து சோறு செய்வது வழக்கம்.... நன்கு அலசி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
 3. ஒரு கைபிடியளவு உளுந்தை ஊறவைத்து வேக வைத்து தனியாகவும் வைத்து கொள்ளவும்.
 4. ஒரு முட்டையை அடித்து வைக்கவும்.
 5. கருப்பட்டியை பாகு எடுத்து கொள்ளவும்.
 6. மருந்து பொடியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
 7. தேங்காய்ப்பால் எடுத்து வைக்கவும். தேங்காய்பால் நல்ல திக்காக வேண்டுமானால் தேங்காய் அளவை கூட்டி கொள்ளவும்.
 8. அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் நெய் இரண்டும் விட்டு காய விடவும்.
 9. நறுக்கிய வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு, கரம் மசாலா வதக்கவும
 10. அத்துடன் உரித்த பூண்டு பல்லை சேர்க்கவும்,...மல்லி,கருவேப்பிலை, புதினா சேர்த்து வதக்கவும்.
 11. பின்பு கரைத்து வைத்த மருந்து பொடியை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி 10நிமிடம் வேக வைக்கவும்.
 12. வெந்த பின்பு பச்சை மிளகாய் சேர்க்கவும்.
 13. தேங்காய்பாலை அரிசியின் அளவிற்கு இரண்டு அளவு எடுத்து விடவும். அரிசியின் தரம்,அளவு பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.
 14. உளுந்தை தனியாக வேக வைத்தும் எடுத்து வைக்கலாம்.அல்லது அரிசியுடனும் வேக வைக்கலாம்.
 15. தேங்காய்ப்பால் நுரை கூடி வரும் பொழுது அரிசியை தட்டவும்,உப்பு போடவும்.மீடியம் தீயில் வைத்து மூடவும்.பின்பு அடுப்பை குறைத்து விடவும்.
 16. சோறு பாதி வெந்ததும் வேக வைத்த உளுந்தை சேர்க்கவும்.
 17. கருப்பட்டி பாகு எடுத்து வைக்கவும். சோறு வெந்து மேல் வரும் பொழுது அடித்த முட்டை, வடிகட்டிய கருப்பட்டி பாகு தேவைக்கு விட்டு ஒரு போல் சோறு குழையாதவாறு பிரட்டவும்.கருப்பட்டி கிடைக்கவில்லை என்றால் சீனி சிறிது சேர்த்து கொள்ளலாம்.
 18. மூடி போட்டு 10 நிமிடம் சிம்மில் தம் போடவும்,அடி பிடிக்காதபடி பார்த்து கொள்ளவும்.திறந்து பிரட்டி விட்டு பரிமாறவும்.
 19. வித்தியாசமான சுவையில் மருந்து சோறு தயார் ..!!!மீன் குழம்புடன் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Oct-05-2018
Maritta Felix   Oct-05-2018

Enna marunthu podi?? Marunthu podi eppadi seivathu???

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்