வீடு / சமையல் குறிப்பு / நெல்லை ஏர்வாடி மாசி பொறிச்ச கறி

Photo of Nellai Eruvadi Maasi Pooricha Curry by Fathima Sujitha at BetterButter
383
0
0.0(0)
0

நெல்லை ஏர்வாடி மாசி பொறிச்ச கறி

Oct-04-2018
Fathima Sujitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நெல்லை ஏர்வாடி மாசி பொறிச்ச கறி செய்முறை பற்றி

வெங்காயம் தக்காளி புளி கரைசலுடன் மாசி பொடி சேர்த்து செய்வது....ரசம் சோறு , பருப்பு சோறு ,சாம்பார் சோறு க்கு அருமையாக இருக்கும்...!!

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாசி பொடி - 4 டீஸ்பூன்
  2. வெங்காயம் - 4
  3. தக்காளி - 1
  4. புளி - நெல்லிக்காய் அளவு
  5. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  6. மிளகாய் - 1
  7. கறிவேப்பில்லை - சிறிதளவு
  8. எண்ணெய் - 50 கிராம்
  9. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. பொன்னிறமாக மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. நன்கு வதங்கி வரும் போது மாசி பொடி, மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
  5. புளி கரைசல் ஊற்றி வதக்கவும்.
  6. தேவைக்கு தண்ணீர் தெளித்து மாசியை வேக விடவும்.
  7. இறுதியாக உப்பு கறிவேப்பில்லை சேர்க்கவும்.
  8. எண்ணெய் சுருண்டு வரும் போது அடுப்பை ஆஃப் செய்யவும்.
  9. சுவையான மாசி பொறிச்ச கறி தயார் ...!!!
  10. ரச சோறு, பருப்பு சோறு உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்