வீடு / சமையல் குறிப்பு / காளான் கிரேவி மற்றும் பூரி

Photo of Mushroom grevi and poori by sudha rani at BetterButter
767
0
0.0(0)
0

காளான் கிரேவி மற்றும் பூரி

Oct-05-2018
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காளான் கிரேவி மற்றும் பூரி செய்முறை பற்றி

கோயம்புத்தூர் ஸ்பெஷல் காளான் மசாலா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. காளான் கிரேவி செய்ய:
  2. காளான் 1 பாக்கெட்
  3. பட்டாணி 1 கப்
  4. கறிமசால் தூள் 2 ஸ்பூன்
  5. சீரகத்தூள் 1 ஸ்பூன்
  6. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. தாளிக்க:
  10. கடலை எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
  11. கடுகு 1 ஸ்பூன்
  12. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
  13. பச்சைமிளகாய் 4
  14. பெரிய வெங்காயம் 2
  15. கறிவேப்பிலை சிறிது
  16. கொத்தமல்லி தழை சிறிது
  17. பிரியாணி இலை 2
  18. பட்டை 2
  19. மசாலா அரைக்க:
  20. சின்ன வெங்காயம் 1/4 கிலோ
  21. தக்காளி 4
  22. தேங்காய் துருவல் 1/2 கப்
  23. பூரி செய்ய:
  24. கோதுமை மாவு
  25. உப்பு தேவையான அளவு
  26. தண்ணீர்

வழிமுறைகள்

  1. காளான் கிரேவி:
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை மற்றும் படடை சேர்த்து வெடித்ததும் கடுகு நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. பின் சுத்தம் செய்த காளான் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின் கொடுத்துள்ள மசாலா தூள்களை சேர்த்து சிறிது நேரம் வரை வதக்கி பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
  5. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வதக்கி மிக்ஸியில் அரைக்கவும்
  6. காளான் மற்றும் பட்டாணி நன்கு வெந்ததும் அரைத்த விழுது உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  7. பூரி செய்ய:
  8. கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து எண்ணெய் ஊற்றி ஊறவிடவும்
  9. பின் பூரியாக திரட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்