உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / நெல்லை கத்திரிக்காய் கொத்சு

Photo of Nellai Kathirikkai Gotsu by Sowmya Sundar at BetterButter
40
1
0(0)
0

நெல்லை கத்திரிக்காய் கொத்சு

Oct-05-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெல்லை கத்திரிக்காய் கொத்சு செய்முறை பற்றி

நெல்லை மாவட்டத்தில் காலை உணவான இட்லி , தோசை , பொங்கலுக்கு தொட்டுக் கொள்ள இந்த கத்தரிக்கா கொத்சு / கிச்சடி செய்வார்கள். சிலர் கெட்டியாகவதற்கு தேங்காய் துருவல் சேர்த்து செய்வார்கள் .எங்கள் வீட்டில் கத்திரிக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடையுவோம் .

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • ఉడికించాలి
  • మితముగా వేయించుట
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்திரிக்காய் கால் கிலோ
  2. பாசிப்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  3. சின்ன வெங்காயம் 10
  4. புளி ஒரு நெல்லிக்காய் அளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. பச்சை மிளகாய் 4
  7. கறிவேப்பிலை சிறிது
  8. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  9. மஞ்சள் தூள், பெருங்காயம் தலா 1/2 டீஸ்பூன்
  10. கடுகு ,உளுத்தம் பருப்பு ,கடலை பருப்பு தலா அரை டீஸ்பூன்
  11. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. குக்கரில் கத்திரிக்காய், பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்துக் கடைந்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பு , கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. சிறிது வதங்கியதும் புளி கரைசல்,பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.பின் வெந்த கத்திரி கடைசல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
  4. கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்