BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / inippu kanji

Photo of inippu kanji by Apsara Fareej at BetterButter
398
1
5(1)
0

inippu kanji

Oct-05-2018
Apsara Fareej
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உடைத்த கோதுமை ரவை - 1/2 கப்
  2. ஓட்ஸ் - 2 மேஜைக்கரண்டி
  3. பால் - 2 டம்ளர்
  4. மில்க்மெய்ட் - 1/4 கப்
  5. சீனி - 1/4 கப்
  6. நெய் - 2 மேஜைக்கரண்டி
  7. ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
  8. பன்னீர் ( எ) ரோஸ் வாட்டர் - 1 தேக்கரண்டி
  9. பட்டை - அரை இன்ச் அளவு
  10. கிராம்பு - 2
  11. முந்திரி - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கோதுமை ரவையையும், ஓட்ஸையும் ஒரு கோப்பையில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். முந்திரியை உடைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடு வந்ததும் முந்திரியை பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு அந்த நெய்யில் பட்டை, கிராம்பு போட்டு விட்டு, அதிலேயே ஊறவைத்த கோதுமை ரவையை ஊற்றி, அத்துடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
  4. கோதுமை ரவை வேகும் முன்பே தண்ணீர் சுண்டி விட்டால் இன்னும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். கோதுமை வெந்ததும், அதில் சீனியும், பாலும் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. சீனி கரைந்ததும், மில்க்மெய்ட், உப்பு அரை தேக்கரண்டி, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
  6. பின்பு கடைசியாக பன்னீர் ஊற்றி கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
  7. இறக்கியவற்றில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து விட்டு மூடி வைத்து விடவும். சூடாகவோ, ஆறியோ பரிமாறலாம். இனிப்பு அவரவர் சுவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ கொள்ளலாம்.
  8. சுவையான , சத்தான, ரிச்சான கல்யாண வீட்டு இனிப்பு கஞ்சி தயார். உபசரிக்கும் போது பன்னீர் ரோஸின் ஒரு இதழை மேலே வைத்து கொடுத்தால் பார்க்கவும் அழகாக இருக்கும். சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raihanathus Sahdhiyya
Oct-05-2018
Raihanathus Sahdhiyya   Oct-05-2018

My fav .... This is also prepared in Nagore weddings!!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்