வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் முட்டை குழம்பு

Photo of Ridge gourd egg curry by Vahitha Hasan at BetterButter
499
1
0.0(0)
0

பீர்க்கங்காய் முட்டை குழம்பு

Oct-05-2018
Vahitha Hasan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் முட்டை குழம்பு செய்முறை பற்றி

அம்மா பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பீர்க்கங்காய் மற்றும் தேங்காய் பால் கலந்து செய்யப்படும் முட்டை குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நறுக்கிய பீர்க்கங்காய் துண்டுகள் 2 கப்
  2. இரண்டு முட்டை
  3. ஒரு கப் சின்ன வெங்காயம் நறுக்கியது
  4. அந்தகக் இரண்டாம் தேங்காய்ப்பால்
  5. ஒரு கப் முதல் தேங்காய்ப் பால்
  6. வேக வைத்த கடலைப்பருப்பு ஒரு கப்
  7. இரண்டு பச்சை மிளகாய்
  8. ஒரு எடுக்க கருவேப்பிலை
  9. இரண்டு மேஜைக்கரண்டி கறிமசாலாத்தூள்
  10. ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள்
  12. உப்பு தேவையான அளவு
  13. 2 குழிக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்
  2. பின்பு அதனுடன் நறுக்கிய பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. ஒரு கோப்பையிலே இரண்டாம் தேங்காய்ப் பாலுடன் கறிமசாலா தூள் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்
  4. பீர்க்கங்காய் துண்டுகள் லேசாக வெந்ததும் கரைத்து வைத்த தேங்காய் பால் கலவையை ஊற்றி கொதிக்க விடவும்
  5. தேங்காய் பால் கொதி வரும் பொழுது வேகவைத்த கடலை பருப்பை ஊற்றி கிளறவும்
  6. பின்பு அடுப்பை குறைத்து உப்பு போட்டு சிறிது கிளறி முதல் தேங்காய் பாலை ஊற்றவும்
  7. முட்டையை அங்கு அங்கு உடைத்து ஊற்றி அடுப்பை குறைத்து மூடி போட்டு வைக்கவும்
  8. முட்டை ஊற்றிய உடன் குழம்பை கிளற கூடாது
  9. முட்டை வெந்தவுடன் சூடாக சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்