BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / காயல் ஸ்பெஷல் கறி ஊறுகாய்

Photo of Kayal Special mutton pickle by Nafeesa Thahira at BetterButter
204
6
0(0)
0

காயல் ஸ்பெஷல் கறி ஊறுகாய்

Oct-05-2018
Nafeesa Thahira
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

காயல் ஸ்பெஷல் கறி ஊறுகாய் செய்முறை பற்றி

சுவையான கறி ஊறுகாய் மட்டுமே இருந்தால் போதும்.. வேறு சைட் டிஷ் தேவையே இல்லை

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மட்டன் ½ கிலோ
  2. நல்லெண்ணை 200 மில்லி
  3. கடுகு சிறிது
  4. பூண்டு 100 கிராம்
  5. பச்சை மிளகாய் 2 எண்ணிக்கை
  6. கறிவேப்பிலை 1 பிடி
  7. பெருங்காயத்தூள் 1 மேசை கரண்டி
  8. வத்தல் தூள் 5 மேசை கரண்டி
  9. வெந்தயத்தூள் ¼ தே கரண்டி
  10. தக்காளி ½ கிலோ
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. வினிகர் 350 மில்லி

வழிமுறைகள்

  1. கறியை சுத்தம் செய்து நன்கு தண்ணீரை வடிய விட்ட பின் அத்துடன் இஞ்சி பூண்டு, உப்பு,வத்தல் தூள்,கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் வினிகர் ஊற்றி வரட்டி எடுக்கவும்.
  2. பின் வாணிலியில் நல்லெண்ணை ஊற்றி கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை,கொறு கொறுவென தட்டி வைத்த பூண்டு சேர்த்து பொறிய விடவும்
  3. இத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளவும்
  4. தக்காளியை நன்கு அடித்து அதனையும் தாளிப்புடன் சேர்த்துக் கொள்ளவும்
  5. தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் விட ஆரம்பித்ததும் அத்துடன் வரட்டிய கறியை சேர்த்து கொள்ளவும்
  6. பின் வத்தல் தூள்,உப்பு மற்றும் வினிகர் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  7. எல்லாம் சேர்ந்து எண்ணெய் விட்டதும் சிறிது வெந்தயத் தூள் போட்டு அடுப்பை உடனே அனைத்து விடவும்.
  8. சுவையான கறி ஊறுகாய் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்