வீடு / சமையல் குறிப்பு / பருத்திப்பால் பாயசம்

Photo of Parithippaal paayasam by Mughal Kitchen at BetterButter
293
3
0.0(0)
0

பருத்திப்பால் பாயசம்

Oct-05-2018
Mughal Kitchen
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பருத்திப்பால் பாயசம் செய்முறை பற்றி

It is famous in madurai and Aruppukottai it will cure cold. It will enrich the growth of children

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பருத்திக்கொட்டை கால் கிலோ
  2. தேங்காய் அரை மூடி
  3. மண்டை வெல்லம் 300 கிராம்
  4. ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  5. சுக்குத் தூள் ஒரு டீஸ்பூன்
  6. பச்சரிசி மாவு 50 கிராம்
  7. ஜவ்வரிசி 50 கிராம்

வழிமுறைகள்

  1. பருத்திக்கொட்டை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் கிரைண்டரில் நன்கு ஆட்டிக் கொள்ளவும்
  2. ஆட்டியபின் தேங்காய் பால் எடுப்பது போல் பருத்தியை பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்
  3. தேங்காயை துருவிக் கொள்ளவும்
  4. வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்
  5. ஜவ்வரிசியை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  6. பச்சரிசி மாவை கரைத்து வைக்கவும்
  7. அடுப்பில் பாத்திரத்தை வைத்து முதலில் பருத்தி பாலை சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும்
  8. பால் நன்கு பொங்கிய பின் சிம்மில் வைத்து மண்ட வெல்ல பாகை சேர்க்கவும்
  9. பின் சுக்குத்தூள் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
  10. பின் வேக வைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும்
  11. பின் கரைத்த பச்சரிசி மாவை ஊற்றி நன்கு கிளறவும்.பின் தேங்காய் பூ சேர்க்கவும்
  12. குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்து பின் அடுப்பை அணைக்கவும்
  13. ஆரோக்கியமான சத்தான பருத்திப் பால் பாயாசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்