BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு முட்டை குருமா

Photo of Chittinad egg kurma by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
0
2
0(0)
0

செட்டிநாடு முட்டை குருமா

Oct-05-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு முட்டை குருமா செய்முறை பற்றி

முட்டையில் செய்யப்படும் குருமா

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வேக வைத்த முட்டை 4
  2. சிறிய வெங்காயம் அரை கப்
  3. தக்காளி-3
  4. கறிவேப்பிலை சிறிது
  5. பட்டை ஒன்று
  6. மிளகு 10
  7. சீரகம் ஒரு டீஸ்பூன்
  8. சோம்பு அரை டீஸ்பூன்
  9. முந்திரி-10
  10. பொட்டுக்கடலை ஒரு டீஸ்பூன்
  11. கசகசா ஒரு டீஸ்பூன்
  12. தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
  13. கொத்தமல்லி இலை சிறிது
  14. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  15. இஞ்சி ஒரு துண்டு
  16. பூண்டு 5 பல்
  17. உப்பு தேவைக்கேற்ப
  18. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  19. மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப
  20. தனியாத் தூள் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் பட்டை மிளகு சீரகம் இஞ்சி பூண்டு கசகசா முந்திரி பொட்டு கடலை ஆகியவைகளை நன்றாக வறுக்கவும்
  2. கடாயில் உள்ள பொருட்களை வறுத்து பின் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்
  3. வறுத்த பொருட்களை அரைத்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை தாளிக்கவும்
  5. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்
  6. பின் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்
  7. நன்றாக வதங்கியதும் இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றவும்
  8. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  9. பின் வேக வைத்த முட்டையை ஒன்றிரண்டாக பொடித்து குருமாவுடன் சேர்க்கவும்
  10. குறைந்த தீயில் 5 முதல் 10 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
  11. செட்டிநாடு முட்டை குருமா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்