வீடு / சமையல் குறிப்பு / சென்னை வடகறி

Photo of Chennai vada curry by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
512
2
5.0(0)
0

சென்னை வடகறி

Oct-05-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சென்னை வடகறி செய்முறை பற்றி

வடையினால் செய்யப்படும் கறி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலைப்பருப்பு அரை கப்
  2. பச்சை மிளகாய் ஒன்று
  3. இஞ்சி சிறு துண்டு
  4. பூண்டு 5 பல்
  5. சோம்பு அரை டீஸ்பூன்
  6. தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
  7. பொட்டுக்கடலை 2 டேபிள்ஸ்பூன்
  8. முந்திரி 2 டேபிள்ஸ்பூன்
  9. பட்டை ஒன்று
  10. பிரிஞ்சி இலை ஒன்று
  11. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  12. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  13. பொடியாக அரிந்த வெங்காயம் 3
  14. பொடியாக அரிந்த தக்காளி மூன்று
  15. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  16. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  17. மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப
  18. கரம் மசாலா தூள் கால் டீஸ்பூன்
  19. தனியா தூள் 2 டீஸ்பூன்
  20. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலைப் பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மிக்ஸியில் ஊறிய பருப்பு பூண்டு இஞ்சி சோம்பு பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  3. அரைத்த மாவை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்
  4. வடை ரெடி
  5. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை பிரிஞ்சி இலை சோம்பு தாளிக்கவும்
  6. பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்
  8. உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்
  9. இதனுடன் அரைத்த முந்திரி தேங்காய் கலவை பொரித்து வைத்துள்ள வடை சேர்த்து வதக்கவும்
  10. சிறிது தண்ணீர் கலந்து 5 நிமிடம் குறைந்த தீயில் நன்றாக வேக விடவும்
  11. சென்னை வடைகறி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்