வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளி கிழங்கு மசால்

Photo of Topiaco Masala / Kappa kizhangu masala by Fathima Beevi at BetterButter
1033
1
0.0(0)
0

மரவள்ளி கிழங்கு மசால்

Oct-06-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளி கிழங்கு மசால் செய்முறை பற்றி

மரவள்ளி கிழங்கு மசால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மரவள்ளி கிழங்கு-பெரியது 1
  2. சிறிய வெங்காயம்- 2
  3. காய்ந்த மிளகாய் வற்றல்-4
  4. பூண்டு பற்கள்-8
  5. புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
  6. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  8. தேங்காய் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  9. உப்பு- தேவையான அளவு
  10. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  11. கருலேப்பில்லை- ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. மரவள்ளி கிழங்கின் தோல் நீக்கி சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பின்பு கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி எடுக்கவும்
  3. ஒரு குக்கரில் கழுவிய கிழங்கு ஒரு கப் தண்ணீர் மற்றும் சிறிது உப்பு  சேர்த்து ஒன்றோ அல்லது இரண்டு விசிலோ வரும் வரை வேக வைக்கவும். 
  4. பின்பு விசில் அடங்கியதும் வேக வைத்த கிழங்கை தண்ணீர் இல்லாமல்  வடிகட்டி எடுக்கவும்.
  5. மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் வற்றல், சிறிய வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் புளி சேர்த்து கரமொரவென அரைத்து எடுக்கவும்
  6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து சிறிது கருலேப்பில்லை, அரைத்த விழுது, மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
  7. பின்பு வேகவைத்த கிழங்கை சேர்த்து மிதமான சூட்டில் கிழங்கு மசாலாவுடன் சேரும் வரை கிளறவும்.
  8. ஒரு 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் நன்கு கிளறிவிடவும்.
  9. சூடான சாதம், பொறித்த மீனுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்