வீடு / சமையல் குறிப்பு / சங்கரன்பந்தல் ஸ்பெஷல் உளுந்தங்களி

Photo of urad dal kali by Apsara Fareej at BetterButter
1099
0
0.0(0)
0

சங்கரன்பந்தல் ஸ்பெஷல் உளுந்தங்களி

Oct-06-2018
Apsara Fareej
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சங்கரன்பந்தல் ஸ்பெஷல் உளுந்தங்களி செய்முறை பற்றி

சங்கரன்பந்தல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பெண் பிள்ளைகள் பூப்பெய்தால், இந்த களியை செய்து பிள்ளைகளுக்கு 7 ஆம் நாள், 10 ஆம் நாள் என கொடுப்பார்கள். அத்தோடு அக்கம் பக்கத்தில் உள்ள அனைவருக்கும் கொடுத்து விடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கறுப்பு உளுந்து - 1 ஆழாக்கு
  2. முட்டை - 3
  3. திக்கான தேங்காய்பால் - 1/2 டம்ளர்
  4. அரிசி மாவு - 2 மேஜைக்கரண்டி
  5. ரவை - 1 மேஜைக்கரண்டி
  6. சீனி - 1 கப்( தலை தட்டி)
  7. நெய் - 50 மிலி
  8. நல்லெண்ணெய் - 60 மிலி
  9. உப்பு - 3/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உளுந்தை தோலுடன் சேர்ப்பதால் 4 மணிநேரமாவது ஊற வைக்க வேண்டும். வெள்ளை உளுந்தை சேர்த்தால் 2 மணிநேரம் ஊறினால் போதுமானது. தேங்காய்பாலையும் திக்காக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. உளுந்தை நன்கு கழுவி விட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் அரைக்க வேண்டும். பிறகு அதில் முட்டை உடைத்து ஊற்றி, அதிலேயே அரிசி மாவு, ரவை, தேங்காய்பால் , உப்பு எல்லாம் போட்டு நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு அகன்ற இரும்பு சட்டி அல்லது கடாயில் என்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடு வந்ததும், அரைத்த கலவையை ஊற்றி ஒரு நிமிடம் அப்படியே வைக்கவும்.
  4. பின்பு நன்கு அதை இரண்டு நிமிடம் அரை பதம் வேகும் வரை கிளறி விட்டு கொண்டிருக்கவும்.
  5. அதன் பிறகு சீனியை சேர்த்து நன்கு ஒன்று சேர கிளறி விட்டு மூடி போட்டு மிதமான தீயிலேயே ஐந்து நிமிடம் விடவும்,
  6. இப்படியே இரண்டு மூன்று தடவை இடையிடையே கிளறிவிட்டு மூடி போட்டு வைக்கவும். சீக்கிரமே களி வெந்து விடும். ஆனாலும் அடி லேசாக பிடிக்க ஆரம்பிக்கும் போது அதை சுரண்டி விட்டே கிளறினால் பொன்னிறமான அந்த அடி எல்லாவற்றிலும் கலந்து ஆங்காங்கே லேசான மொறுமொறுப்புடன் சாப்பிட நன்றாக இருக்கும். ஓரளவு இப்படியே கிளற உதிரியானதும், இறக்கி விடவும்.
  7. இந்த களி பெண்களுக்கு மிகவும் சத்தானது. மாதவிடாய் காலங்களில் செய்து சாப்பிட கொடுக்கலாம். ஆண் பிள்ளைகளுக்கும் சாப்பிட கொடுக்கலாம். கறுப்பு உளுந்து, நல்லெண்ணெய், முட்டை இந்த மூன்றும் கலந்தது இடுப்பு எலும்பிற்கு வலுவானது. திரும்ப திரும்ப சூடு பண்ணி சாப்பிட சூப்பராக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்