வீடு / சமையல் குறிப்பு / நாகர்கோவில் நேத்திரம் சிப்ஸ்

Photo of Nagercoil Banana Chips by Fathima Sujitha at BetterButter
1143
1
0.0(0)
0

நாகர்கோவில் நேத்திரம் சிப்ஸ்

Oct-06-2018
Fathima Sujitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நாகர்கோவில் நேத்திரம் சிப்ஸ் செய்முறை பற்றி

நேந்தரம் பழம் சிப்ஸ்னா அது கேரளா சிப்ஸ் தான் என்று பலரும் சொல்லுவாங்க ..ஆனால் இந்த நேந்தரம் சிப்ஸ் கேரளால மட்டும் இல்லை தமிழ்நாட்டில நாகர்கோயிலயும் இந்த சிப்ஸ் அவ்வளவு பிரபலம்...மருத்துவ குணம் கொண்ட ஒரு பழம் இது.. இந்த பழத்தை உண்டால் உடலில் பல வியாதிகள் குணமாகும் மற்றும் அது மருத்துவ ரீதியாகவும் நிரூபணமான உண்மை...எலும்புக்கு சக்தி தரும் நேத்திர சிப்ஸ் எப்படி செய்யலாம் னு பார்ப்போம்...!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நேந்திரம் பழம் - 3
  2. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  3. உப்பு கரைத்த தண்ணீர் - 1 டீஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. தேங்காய் எண்ணெய் - தே.அ

வழிமுறைகள்

  1. நேந்திர பழத்தின் தோலை உறித்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி கலந்து கொண்டு அதில் நேந்திர பழங்களை சேர்த்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. நேந்திர பழங்கள் மஞ்சள் நிறமாக மாறி இருக்கும்.
  4. வட்ட வடிவில் வெட்டியோ அல்லது சிப்ஸ் செதுக்கும் கட்டரில் கட் செய்து கொள்ளவும்.
  5. மெல்லிய சிப்ஸ் களாக செதுக்கி கொள்ளவும்.
  6. அவற்றை ஒரு பேப்பரில் போட்டு உலர்த்தி கொள்ளவும்.
  7. கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி ஒரு ஒரு துண்டுகளாக போடவும்.
  8. அது பொரிக்க ஆரம்பிக்கும் பொது, அதில் நீங்கள் உப்பு கலந்த அந்த தண்ணீரை ஊற்றி கொண்டு நன்றாக பொறித்து எடுக்கவும்.
  9. சுவையான மொறு மொறு நாகர்கோவில் சிப்ஸ் ரெடி..!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்