வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி இருட்டுக்கடைஅல்வா

Photo of THIRUNELVELI special iruttu kadai halwa by Vanshi Cafeteria at BetterButter
165
1
0(0)
0

திருநெல்வேலி இருட்டுக்கடைஅல்வா

Oct-06-2018
Vanshi Cafeteria
780 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி இருட்டுக்கடைஅல்வா செய்முறை பற்றி

திருநெல்வேலி பேமஸ் இருட்டுக் கடை அல்வா .தென் தமிழகத்தின் இணையற்ற இனிப்பு

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • మీడియం/మధ్యస్థ
 • దీపావళి
 • తమిళనాడు
 • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. சம்பா கோதுமை (முழு) 1.5 கப்
 2. சர்க்கரை 2.5கப்
 3. நெய் 1கப்
 4. முந்திரி பருப்பு

வழிமுறைகள்

 1. 1.5கப் முழு கோதுமையை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
 2. 8 மணி நேரத்திற்குப் பிறகு ஊற வைத்தக் கோதுமையை மிக்ஸியில் சேர்த்து ஊற வைத்த நீருடன் அரைக்கவும்.அரைத்துக் கிடைத்த பாலை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.இவ்வாறு மூன்று முறை பால் எடுக்கவும்.பால் எடுத்த பிறகு 3 மணி நேரம் தொடாமல் ஒரு இடத்தில் வைக்கவும்.வெள்ளை பால் தனியாக பிரிந்து கீழேச் சேரும். மேலே தங்கும் நீரை கீழே ஊற்றி விடுவோம். கீழே உள்ள பாலில் 1:3 அளவில் தண்ணீர்ச் சேர்க்க வேண்டும்.
 3. 3.முதலில் அரை கப் சர்க்கரையை காரமல்(caramelization) செய்ய வேண்டும் .அரைக் கப்ச் சக்கரையுடன் தண்ணீர்ச் சேர்த்து கொதிக்க விட வேண்டும் .காரமல் நிறம் வரும் வரைக் கொதிக்க வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் 2 கப்ச் சக்கரைச் சேர்த்து தண்ணீரில்க் கொதிக்க வைக்க வேண்டும். காரமல்(caramelise)செய்த பாகை இந்த 2 கப் சக்கரை பாகுடன்க் கலந்துக் கொள்ளவும்.நன்கு கிளறிவிட்டு ஒரு கம்பி பதம் வரும் வரைக் கொதிக்க வேண்டும் .
 4. 4.இப்போது எடுத்து வைத்தக் கோதுமைப் பாலைச் சக்கரைப் பாகுடன்ச் சேர்க்க வேண்டும் .சிறிதுச் சிறிதாகச் சேர்க்கவும். நீங்கள் கோதுமைப் பாலைச் சேர்த்தவுடன் விடாமல்க் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.
 5. 5.நெய்யை இடை இடையேக் கலந்துக் கொண்டு இருக்க வேண்டும்..இடை விடாமல்க் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் ..அல்வா நன்றாக திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் நன்றாகக் கண்ணாடி பதத்தில் நெலு நெலு வெனக் கிடைக்கும்.
 6. 5.இந்தப் பதத்திற்கு 5 நிமிடம் முன்பு முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். அல்வா பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு வேறுப் பாத்திரத்தில் மாற்றவும்.ஆறியப் பிறகு இன்னும் கெட்டி ஆகி விடும். நமது திருநெல்வேலி அல்வா ரெடி. சுவைத்து மகிழ்வோம்.
 7. திருநெல்வேலி அல்வா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்