கோதுமை அவல் சிவ்டா | Wheat Flakes Chivda in Tamil

எழுதியவர் Priya Suresh  |  2nd Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Wheat Flakes Chivda by Priya Suresh at BetterButter
கோதுமை அவல் சிவ்டாPriya Suresh
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

103

0

கோதுமை அவல் சிவ்டா recipe

கோதுமை அவல் சிவ்டா தேவையான பொருட்கள் ( Ingredients to make Wheat Flakes Chivda in Tamil )

  • உப்பு
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • கொஞ்சம் கறிவேப்பிலை
  • 1/2 தேக்கரண்டி சர்க்கரை
  • 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/4 கப் பொட்டுக்கடலை
  • 1/4 கப் பச்சை வேர்கடலை
  • 2 கப் கோதுமை அவல்

கோதுமை அவல் சிவ்டா செய்வது எப்படி | How to make Wheat Flakes Chivda in Tamil

  1. கோதுமை அவலை மொறுமொறுப்பாகும் வரை எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, கடுகை வெடிக்கவிட்டு கறிவேப்பிலை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
  2. இப்போது பச்சை வேர்கடலையைச் சேர்த்து சிம்மில் பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும்.
  3. பொட்டுக்கடலை சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும். உலர் நிலையில் வறுத்த கோதுமை அவல் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும். அடுப்பை நிறுத்திக்கொள்ளவும்.
  4. இறுதியாக மிளகாய்த் தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கும்வரை கிண்டவும். இந்த மொறுமொறுப்பான சிவ்டாவை உண்டு மகிழவும்.

Reviews for Wheat Flakes Chivda in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.