வீடு / சமையல் குறிப்பு / Chettinad KaiMurukku/Hand made Chakli

Photo of Chettinad KaiMurukku/Hand made Chakli by Juvaireya R at BetterButter
910
4
0.0(2)
0

Chettinad KaiMurukku/Hand made Chakli

Oct-06-2018
Juvaireya R
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. 2 கப் புழுங்கரிசி (இட்லி அரிசி)
  2. 1/4 கப் உளுந்தமாவு (வறுத்து அரைத்ததது)
  3. கல் உப்பு சிறிதளவு
  4. வெள்ளை பூண்டு 2 பல்
  5. வரமிளகாய்-2
  6. வெண்ணெய் ஒரு தேக்கரண்டி
  7. கருப்பு எள் சிறிதளவு
  8. சீரகம் சிறிதளவு
  9. பெருங்காயத்தூள் சிறிதளவு
  10. பொரிக்க தேவையான எண்ணெய்

வழிமுறைகள்

  1. இரண்டு மணி நேரம் இட்லி அரிசியை ஊற வைக்கவும் தண்ணீரில்
  2. இரண்டு மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து அதனுடன் வரமிளகாய் உப்பு வெள்ளை பூண்டு வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  3. சிறிது தண்ணீர் மற்றும் உபயோகித்து அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த மாவு கலவையில் பெண்ணை உளுந்த மாவு மற்றும் கருப்பு எள் சீரகம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. மிருதுவான பதத்திற்கு மாவை பிசைந்து எடுத்துக் கொள்ளவும்
  6. கைகளின் உதவியால் சிறிதளவு மாவினை எடுத்து கை முறுக்கை சுத்தி 3 வரிசையாக சுத்தி வைக்கவும்
  7. இதேபோல் அனைத்து மாவினையும் ஒரு துணி அல்லது பிளாஸ்டிக் பையின் மேல் சுத்திவைக்கவும்.
  8. கடாயில் எண்ணெயை காய வைக்கவும்
  9. எண்ணெய் காய்ந்ததும் மெதுவாக ஒவ்வொரு முறுக்காக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  10. முறுக்கு பொன்னிறம் வந்ததும் எடுத்து எண்ணெயை வடித்து மாற்றவும்
  11. அருமையான காரைக்குடி கை முறுக்கு தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
hajirasheed haroon
Oct-07-2018
hajirasheed haroon   Oct-07-2018

super sister

Jayanthi kadhir
Oct-07-2018
Jayanthi kadhir   Oct-07-2018

அருமை

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்