வீடு / சமையல் குறிப்பு / கோவை அரிசிம்பருப்பு சாதம்

Photo of Coimbatore Arisimparuppu satham by Juvaireya R at BetterButter
1000
1
0.0(0)
0

கோவை அரிசிம்பருப்பு சாதம்

Oct-07-2018
Juvaireya R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோவை அரிசிம்பருப்பு சாதம் செய்முறை பற்றி

கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டாரங்களில் அரிசியும் பருப்பு சாதம் மிகவும் பிரபலமானது அதில் அரிசி மற்றும் பருப்பு மற்றும் சில வாசனை சாமான்கள் சேர்ந்து இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி ஒரு கப்
  2. 1/4 கப் துவரம்பருப்பு
  3. சின்ன வெங்காயம் 1/2 கப்
  4. தக்காளி நறுக்கியது 2
  5. கடுகு கால் தேக்கரண்டி
  6. வர மிளகாய் 4
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
  9. தேங்காய் எண்ணெய் மூன்று தேக்கரண்டி
  10. நெய் ஒரு தேக்கரண்டி
  11. பெருங்காயம் சிறிதளவு
  12. 3 பல் வெள்ளைப்பூண்டு
  13. ஒரு சிறிய துண்டு இஞ்சி
  14. பட்டை ஒரு துண்டு
  15. சீரகம் அரை தேக்கரண்டி
  16. சோம்பு ஒரு தேக்கரண்டி
  17. முழு மல்லி 2 தேக்கரண்டி
  18. சிறிதளவும் முழு மிளகு

வழிமுறைகள்

  1. வெள்ளைப் பூண்டு, இஞ்சி, வர மிளகாய் ,தனியா ,சீரகம், சோம்பு,பட்டை ஆகியவற்றை கடாயில் போட்டு நன்றாக வறுக்கவும்
  2. வாசனை வரும் வரை நன்றாக வறுத்து அதனை மின் கலவையில் நன்றாக சிறிது நீர் கலந்து அரைத்துக் கொள்ளவும்
  3. பின் அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பில் வைத்து சூடேற்றவும்
  4. இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ,கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயம் ,சின்ன வெங்காயம் ,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்
  5. நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  6. ஒரு கப் அரிசி மற்றும் கால் கப் பருப்பை நன்றாக நீரில் கழுவிக் கொள்ளவும்
  7. அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து வதக்கவும்
  8. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  9. ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் மற்றும் கால் கப் துவரம்பருப்புக்கு அரை கப் தண்ணீர் மொத்தம் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றவும்.
  10. தண்ணீர் கொதித்ததும் அரிசி பருப்பை போடவும்
  11. மிதமான தீயில் மூன்று சத்தம் வரும் வரை வேக விடவும்
  12. மூன்று சத்தத்திற்கு பிறகு மெதுவாக திறந்து சிறிது நெய் சேர்க்கவும்.
  13. பின் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  14. சூடான சுவையான கோயம்புத்தூர் அரிசிம்பருப்பு சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்