வீடு / சமையல் குறிப்பு / நெல்லை உளுந்து கருப்பட்டி இட்லி

Photo of Nellai Ulundhu Karupatti Idli by Sowmya Sundar at BetterButter
1287
1
0.0(0)
0

நெல்லை உளுந்து கருப்பட்டி இட்லி

Oct-07-2018
Sowmya Sundar
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெல்லை உளுந்து கருப்பட்டி இட்லி செய்முறை பற்றி

திருநேல்வேலி மாவட்டத்தில் செய்யக்கூடிய உளுந்து கருப்பட்டி இட்லி . குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி 1 கப்
  2. உளுத்தம் பருப்பு 1/4 கப்
  3. வெந்தயம் 1/4 டீஸ்பூன்
  4. கருப்பட்டி 1/2 கப்
  5. தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
  6. பாசிப்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  7. நெய் 1 டீஸ்பூன்
  8. ஏலக்காய் பொடி 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாகவும் அரிசியை தனியாகவும் தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் உளுந்து கலவை மற்றும் அரிசியை தனித்தனியாக கிரைண்டரில் அரைத்து இரண்டையும் நன்றாக கலந்து ஆறு மணி நேரம் பொங்க விடவும்
  3. பாசிப்பருப்பை வெறும் கடாயில் நன்றாக வறுத்து கொள்ளவும்
  4. கருப்பட்டியில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு வடிகட்டி ஆறியதும் மாவில் கலந்து கொள்ளவும்.நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்
  5. இட்லி தட்டில் மாவை விட்டு ஒவ்வொரு இட்லி மேலும் வறுத்த பாசிப்பருப்பு மற்றும் தேங்காய் துருவல் சிறிது வைத்து கொள்ளவும்
  6. ஆவியில் பத்து நிமிடம் வரை வேக வைத்து கொள்ளவும்
  7. கருப்பட்டி இட்லி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்