வீடு / சமையல் குறிப்பு / மாசி கொழுக்கட்டை

Photo of Maasi kolukkattai by Nazeema Banu at BetterButter
925
1
0.0(0)
0

மாசி கொழுக்கட்டை

Oct-07-2018
Nazeema Banu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாசி கொழுக்கட்டை செய்முறை பற்றி

முகவை மாவட்டம் கீழக்கரையில் சுவையான மாசி கொழுக்கட்டை காலை உணவாக பரிமாறப்படுகிறது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொழுக்கட்டைக்கு
  2. வேண்டிய பொருட்கள்
  3. தேவையானவை
  4. வறுத்த அரிசி மாவு 2கப்
  5. தேங்காய் அரை மூடி
  6. மாசிப்பொடி நான்கு டே.ஸ்பூன்
  7. கா.மிளகாய் 3
  8. பெ.வெங்காயம்2
  9. உப்பு தே.அளவு
  10. ப.மிளகாய் 2
  11. மாசி சட்னிக்கு
  12. தேவையானவை
  13. மாசிப்பொடி 3ஸ்பூன்
  14. தக்காளி பழம் இரண்டு
  15. கா.மிளகாய் 6
  16. உப்பு அரை ஸ்பூன்
  17. எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொழுக்கட்டை செய்ய
  2. தேங்காயை துருவிக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவுடன் துருவிய தேங்காய்பூவை சேர்க்கவும்.
  4. அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் ப.மிளகாய் சேர்க்கவும்.
  5. அதனுடன் மாசிப் பொடி சேர்க்கவும்.
  6. அதிலேயே கா.மிளகாயை நெருப்பில் சுட்டு சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்து உப்பு சேர்க்கவும்
  7. இலேசாய் தண்ணீர் சேர்த்து பிசிறி உருண்டைகள் பிடிக்கவும்.
  8. இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை 20 நிமிடங்கள் வரை வேக விடவும்.
  9. மாசி சட்னி செய்முறை
  10. தக்காளி.கா.மிளகாய் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  11. அதனுடன் மாசிப்பொடி லெமன் சாறு சேர்த்து ஒரு நிமிடம் ஓட விடவும்..
  12. கொழுக்கட்டைக்கு தொட்டுக்கொள்ள காரசாரமான மாசி சட்னி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்