வீடு / சமையல் குறிப்பு / புழுங்கல் அரிசி பிடி கொழுக்கட்டை (திருநெல்வேலி)

Photo of Pulungarisi pidi kolukkattai by Deepa Srivatsan at BetterButter
450
1
0.0(0)
0

புழுங்கல் அரிசி பிடி கொழுக்கட்டை (திருநெல்வேலி)

Oct-07-2018
Deepa Srivatsan
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புழுங்கல் அரிசி பிடி கொழுக்கட்டை (திருநெல்வேலி) செய்முறை பற்றி

புழுங்கல் அரிசியை ஊற வைத்து அரைத்து தேங்காயையும் சேர்த்து திருநெல்வேலி பக்கம் செய்யக்கூடிய ஒரு கொழுக்கட்டை சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி புழுங்கல் அரிசி 2 தம்ளர் (4 மணி நேரம்ஊற வைக்க வேண்டும்
  2. பச்சை மிளகாய் ஆறு
  3. தேங்காய் துருவல் ஒரு கப்
  4. பெருங்காயம் அரை டீஸ்பூன்
  5. கடுகு ஒரு ஸ்பூன்
  6. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. நல்லெண்ணெய் 100 மில்லி
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதல் நாளே புழுங்கல் அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் தேங்காய் துருவல் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நன்றாக மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்
  2. கொழுக்கட்டை செய்வதற்கு முன் அரைத்த மாவை எடுத்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்
  3. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை பெருங்காயம் போட்டு கரைத்து வைத்துள்ள மாவை அதில் ஊற்றவும்
  4. கட்டி இல்லாமல் கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும் சிறிது எண்ணெய் சேர்க்க வேண்டும்
  5. அதை ஒரு பாத்திரத்தில் போட்டு ஆற விட்டு சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும்
  6. அதன் பின் அதை இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் வேக விட்டு இறக்கவும்ங

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்