வீடு / சமையல் குறிப்பு / காஞ்சிபுரம் கோவில் இட்லி

Photo of Kanchipuram kovil idly by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
898
1
0.0(0)
0

காஞ்சிபுரம் கோவில் இட்லி

Oct-07-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
105 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காஞ்சிபுரம் கோவில் இட்லி செய்முறை பற்றி

மிளகு சீரகம் சேர்த்து செய்யப்படும் இட்லி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி அரை படி
  2. உளுந்து கால் படி
  3. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  4. பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்
  5. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  6. சுக்குத் தூள் அரை டீஸ்பூன்
  7. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  10. மிளகு ஒரு ஸ்பூன்
  11. சீரகம் ஒரு ஸ்பூன்
  12. கறிவேப்பிலை ஒரு கொத்து
  13. இஞ்சி பொடியாக நறுக்கியது அரை டீஸ்பூன்
  14. பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. அரிசி உளுத்தம் பருப்பு வெந்தயம் மூன்றையும் நன்றாக கழுவி தண்ணீர் விட்டு 3 மணி நேரம் ஊற விடவும்
  2. ஊறிய அரிசி பருப்பை ரவை பதமாக அரைக்கவும்
  3. அரைத்த மாவை உப்பு கலந்து பத்து மணி நேரம் ஊற விடவும்
  4. நன்றாக மாவு பொங்கியதும் அதில் மிளகுத்தூள் சீரகத்தூள் பெருங்காயத்தூள் சுக்குத்தூள் சேர்த்து கலக்கவும்
  5. கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் மிளகு சீரகம் இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை தாளித்து மாவுடன் கலக்கவும்
  6. வாழை இலையை நன்றாக கழுவி எண்ணெய் தடவி தோசைக் கல்லில் லேசாக சூடு பண்ணவும் அப்பொழுதுதான் டம்ளரில் நன்றாக சுருட்டி வைக்க முடியும்
  7. சூடான வாழையிலையை ரோல் செய்து டம்ளரில் வைக்கவும்
  8. மாவை நன்றாக கலந்து வாழையிலை வைத்த டம்ளரில் முக்கால் பதம் ஊற்றவும்
  9. ரெடி பண்ணிய மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து அதன் மேல் ஒரு வாழை இலையால் மூடி பின் இட்லி பாத்திரத்தை மூடி வைத்து 45 முதல் 60 நிமிடங்கள் வரை வேக விடவும்
  10. ஒரு மணி நேரத்திற்குப் பின் இட்லியை எடுக்கவும்
  11. 15 நிமிடம் இட்லிகளை ஆற விட்டு பின்பு வாழை இலையை எடுத்து வேண்டிய சைஸில் கட் பண்ணவும்
  12. சுவையான காஞ்சிபுரம் கோயில் இட்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்