வீடு / சமையல் குறிப்பு / ஸ்ரீரங்கம் கோவில் புளியோதரை

Photo of Srirangam kovil Puliodarai by Lakshmi Priya at BetterButter
3962
1
0.0(0)
0

ஸ்ரீரங்கம் கோவில் புளியோதரை

Oct-07-2018
Lakshmi Priya
70 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஸ்ரீரங்கம் கோவில் புளியோதரை செய்முறை பற்றி

விரிவான பதிவிற்கு என்டிரி சிடெப்பை பார்க்கவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. புலி 2 நெல்லிக்காய் அளவு
  2. மிளகாய் வற்றல் 15
  3. கொத்தமல்லி விதை ஒரு கைப்பிடி
  4. கடுகு 3 ஸ்பூன்
  5. கடலைப்பருப்பு கால் கப்
  6. உளுத்தம்பருப்பு கால் கப்
  7. வேர்க்கடலை கால் கப்
  8. கருப்பு எள்ளு 2 ஸ்பூன்
  9. நல்லெண்ணெய் தேவையான அளவு
  10. மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. புளியை சிறிது தண்ணீர் ஊற்றி ஊற விடவும்
  2. ஊறிய புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும்
  3. வெறும் வாணலியில் கொத்தமல்லி தழையை வறுத்துக் கொள்ளவும்
  4. 5 மிளகாய் வற்றலையும் வறுத்துக் கொள்ளவும்
  5. இரண்டு ஸ்பூன் வெந்தயத்தையும் வறுத்து கொள்ளவும்
  6. மிளகு கட்டி பெருங்காயத்தையும் வறுத்துக்கொள்ளவும்
  7. வருத்த கலவைகளை ஆறவிடவும்
  8. ஆறிய பின் மிக்ஸியில் பொடி செய்யவும்
  9. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்தவுடன் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு வேர்க்கடலை மிளகாய்வற்றல் அனைத்தையும் தாளிக்கவும்.
  10. பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து புளித்தண்ணீரை ஊற்றவும்
  11. மஞ்சள் பொடி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  12. புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  13. நன்றாக சுண்டி உடன் அடுப்பை நிறுத்தவும்
  14. பச்சரிசி சாதத்தை வடித்துக் கொள்ளவும்
  15. சாதம் வெந்தவுடன் அதில் மஞ்சள் பொடி மற்றும் கருவேப்பிலை சேர்த்து கலக்கவும்
  16. அதில் தயார் செய்து வைத்துள்ள புளிக்காய்ச்சல் சேர்க்கவும்
  17. அரைத்த பொடியை அதில் இரண்டு ஸ்பூன் தூவவும்
  18. எல்லாவற்றையும் நன்றாக கலந்து உப்பு சரி பார்க்கவும்
  19. ஸ்ரீரங்கம் கோவில் புளியோதரை தயார்
  20. அதில் வீட்டில் தயார் செய்த வடாம் வத்தல் அல்லது அப்பளத்துடன் பரிமாறவும்
  21. சுவையான ஸ்ரீரங்கம் கோவில் புளியோதரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்