வீடு / சமையல் குறிப்பு / அரைச்சுவிட்ட வத்தக்குழம்பு ( திருநெல்வேலி ஸ்டைல்)

Photo of Araichuvitta Vathakuzambu( Tirunelveli Special) by Sowmya Sundar at BetterButter
305
1
0.0(0)
0

அரைச்சுவிட்ட வத்தக்குழம்பு ( திருநெல்வேலி ஸ்டைல்)

Oct-07-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரைச்சுவிட்ட வத்தக்குழம்பு ( திருநெல்வேலி ஸ்டைல்) செய்முறை பற்றி

திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்படும் அரைச்சு விட்ட வத்தக்குழம்பு இது . இதனை பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து செய்வார்கள் .நான் மணத்தக்காளி வற்றல் சேர்த்து செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மணத்தக்காளி வற்றல் 2 டீஸ்பூன்
  2. நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி
  3. கடுகு 1 டீஸ்பூன்
  4. கறிவேப்பிலை சிறிது
  5. உப்பு தேவையான அளவு
  6. மஞ்சள் தூள், பெருங்காய பொடி தலா 1/2 டீஸ்பூன்
  7. புளி 1 எலுமிச்சை அளவு
  8. வறுத்து அரைக்க
  9. கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  10. உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
  11. துவரம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  12. கொத்தமல்லி விதை 1 டேபிள் ஸ்பூன்
  13. மிளகாய் வற்றல் 6
  14. மிளகு, சீரகம் தலா 1 டீஸ்பூன்
  15. வெந்தயம் 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் வறுக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்
  2. வறுத்ததை மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை,மணத்தக்காளி வற்றல் சேர்த்து வறுத்து கொள்ளவும்
  4. பின் அதனுடன் புளி கரைசல் , உப்பு, மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து கொதிக்க விடவும்
  5. பின் அதனுடன் அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்
  6. நெல்லை ஸ்பெஷல் வத்தக்குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்