வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி அவியல்

Photo of Tirunelveli Aviyal by Fathima Sujitha at BetterButter
1541
0
0.0(0)
0

திருநெல்வேலி அவியல்

Oct-07-2018
Fathima Sujitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திருநெல்வேலி அவியல் செய்முறை பற்றி

கல்யாண வீடுகளில் இடம் பெரும் ஓர் உணவு ...திருநெல்வேலி ஸ்டைலில் எப்டி செய்யலாம்னு பார்க்கலாம்...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் - 1
  2. பீன்ஸ் - 4
  3. உருளைக்கிழங்கு -1
  4. வாழைக்காய் - 1
  5. சேனைக்கிழங்கு - சிறிதளவு
  6. முருங்கைகாய் - 1
  7. கத்தரிக்காய் - 2
  8. வெள்ளரிக்காய் - சிறிதளவு
  9. மாங்காய் - சிறிதளவு (விரும்பினால்)
  10. வெள்ளை பூசணிக்காய் - சிறிதளவு
  11. அரைக்க :
  12. தேங்காய் - 1/2 கப்
  13. பச்சை மிளகாய் - 3
  14. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  15. சீரகம் - 1 டீஸ்பூன்
  16. தாளிக்க :
  17. தேங்காய் எண்ணெய் - தே.அ
  18. கடுகு - சிறிதளவு
  19. உளுத்தம் பருப்பு - சிறிதளவு
  20. கறிவேப்பில்லை கொத்தமல்லி - சிறிதளவு
  21. உப்பு - தே.அ

வழிமுறைகள்

  1. முதலில் மிக்ஸில் தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் மஞ்சள் தூள் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
  2. காய்கறிகளை ஒரே போல் மெல்லியதாக நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் காய்கறிகளை போட்டு தேவைக்கு சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும்.
  4. தண்ணீர் வற்றி காய் வெந்து வரும் போது அரைத்த தேங்காய் கலவையை சேர்க்கவும். அடுப்பை மீடியமாக வைத்து சிறிது கொதிக்க விட்டு பிரட்டி விடவும்.
  5. கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
  6. மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்த பருப்பு சேர்த்து தாளித்து அவியலில் சேர்க்கவும்.
  7. சுவையான திருநெல்வேலி அவியல் தயார் ...!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்