வீடு / சமையல் குறிப்பு / பருத்தி பால் (மதுரை ஸ்பெஷல்)இளமை தரும்

Photo of Paruthi paal (Madurai Special)Retains Youngness by Mallika Udayakumar at BetterButter
3076
3
0.0(0)
0

பருத்தி பால் (மதுரை ஸ்பெஷல்)இளமை தரும்

Oct-07-2018
Mallika Udayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பருத்தி பால் (மதுரை ஸ்பெஷல்)இளமை தரும் செய்முறை பற்றி

உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் என்றும் உடலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. மதுரைப்பக்கம் எப்போது போனாலும் ஒரு கப் பருத்திப்பாலாவது குடித்துவிட்டு வந்தால்தான் ஊருக்குப்போய்விட்டு வந்த திருப்தியே இருக்கும். மதுரையில் இந்த பருத்திப்பாலை ஆயாக்கள் கேன்களில் எடுத்துவந்து ‘’பர்த்தீ பால்’’ என கத்தி கத்தி வீடுவீடாக விற்பதை பார்த்திருக்கிறேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பருத்தி கொட்டை -‍ 50 கிராம்
  2. தினை மாவு -1 டேபிள் ஸ்பூன்
  3. பழுப்பு சர்க்கரை-3டேபிள் ஸ்பூன்
  4. சுக்கு தூள்-1/2ஸ்பூன்
  5. ஏலக்காய் தூள்-1/2ஸ்பூன்
  6. தேங்காய் பால்-1/2கப்

வழிமுறைகள்

  1. பருத்தி கொட்டையை தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே நன்கு தண்ணீர் விட்டு அலசி சுத்தமாக தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
  2. பிறகு தினை மாவு(1டேபிள் ஸ்பூன்)அல்லது பச்சரிசி மாவு .பழுப்பு சர்க்கரை (2 மேஜைக்கரண்டி )அல்லது வெல்லம்,சுக்கு மற்றும் ஏலக்காய் தூள் எடுத்து கொள்ளவும்.தேங்காய் துருவல் அல்லது தேங்காய் பால் 1/2 கப் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. பருத்தி பாலில் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. பால் ஒவ்வாமை உள்ளவர்கள் பருத்தி பாலை குடித்து வருவதன் மூலம் போதிய சத்துக்களை பெறமுடியும். பருத்தி பாலை அடிக்கடி குடிப்பதால் முறையற்ற மாதவிலக்கு சரியாகும். இருமல், சளி பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  4. தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.மற்றும் ஊற வைத்த பருத்தி கொட்டையை தண்ணீர் வடிகட்டி மீதியை புதிய தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு அரைத்து பால் எடுத்து கொள்ளவும்
  5. பருத்தி பால் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
  6. தினை மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்
  7. கரைத்த தினை மாவை எடுத்து இதில் ஊற்றவும்.
  8. அதில் பழுப்பு சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் சுக்குத் தூள் சேர்த்து கலக்கவும்.
  9. பருத்தி பால் நன்றாக வேக விடவும்.
  10. இதே கடைசியாக தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்
  11. அருமையான சத்துள்ள பருத்தி பால் தயார்
  12. காலையில் காபி, டீ குடிப்பதற்குப் பதிலாக, பருத்திப்பால் குடிக்கலாம். முதல் நாள் இரவிலேயே பருத்தி விதைகளைத் தேவையான அளவு எடுத்து, ஊறவைத்து, காலையில் அதில் இருந்து பால் எடுத்து (ஒரு டம்ளர்), தேங்காய்ப் பால் (ஒரு டம்ளர்), பசும்பால் (ஒரு டம்ளர்) கலந்து குடிக்கலாம். கடின உடல் உழைப்பு  செய்பவர்கள்,  இதனுடன் சம்பா அவல், கருப்பட்டி சேர்த்து, கஞ்சிபோல் காய்ச்சிக் குடிக்க, அன்றைய காலை உணவு அபாரம்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்