வீடு / சமையல் குறிப்பு / முதலூர் மஸ்கோத் அல்வா

Photo of Mudalur Mascoth Halwa by Menaga Sathia at BetterButter
601
2
0.0(0)
0

முதலூர் மஸ்கோத் அல்வா

Oct-07-2018
Menaga Sathia
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முதலூர் மஸ்கோத் அல்வா செய்முறை பற்றி

பொதுவாக அல்வா கோதுமை மாவு,நெய் சேர்த்து செய்வார்கள்,ஆனால் இந்த அல்வாவை மைதா மற்றும் தேங்காய் பாலில் செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா -1/3 கப்
  2. சர்க்கரை -1 கப்
  3. கெட்டி தேங்காய்பால் -1/2 கப்
  4. முந்திரி பருப்பு -10
  5. ஏலக்காய்த்தூள் -1/8 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மைதா மாவை நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.பின் அதில் 1 1/2 கப் நீர் ஊற்றவும்.
  2. பின் கையால் நன்கு பிசைந்து பாலெடுத்து வடிகட்டி சக்கையை எடுக்கவும்.
  3. அந்த நீரை அப்படியே 8 மணிநேரம் வைத்து தெளியவைத்து,மேலொடு தெளிந்த நீரை ஊற்றவும்.
  4. மைதா பால்,1/3 கப் சர்க்கரை, கெட்டி தேங்காய்பால் இவற்றை கலந்து வைக்கவும்.
  5. கடாயில் 2/3 கப் +1 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து கேரமல் செய்யவும்.
  6. கேரமல் கலர் வந்ததும் கலந்து வைத்துள்ள பாலை கவனமாக,மேலே தெளிக்காதவாறு ஊற்றி கைவிடாமல் கிளறவும்.
  7. தேங்காய்பாலிருந்து வரும் எண்ணெயே பொதுமானது.முந்திரியை சேர்க்கவும்.
  8. கடாயின் ஓரங்களில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.
  9. தேங்காய்பாலில் இந்த அல்வாவை செய்வதால் நீண்ட நாள் வைத்திருக்கமுடியாது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்