வீடு / சமையல் குறிப்பு / கீழக்கரை தொதல்

Photo of Kilakkarai tothal by sudha rani at BetterButter
431
2
0.0(0)
0

கீழக்கரை தொதல்

Oct-07-2018
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கீழக்கரை தொதல் செய்முறை பற்றி

கீழக்கரையில் மிகவும் பிரபலமான இனிப்பு தேங்காய் பால் மற்றும் கருப்பட்டி சேர்த்து செய்யப்படும் ஆரோக்கியமான இனிப்பு இந்த இனிப்பு ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தேங்காய் பால் 6 கப்
  2. கருப்பட்டி 2 கப்
  3. பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு 1 கப்
  4. பாசிப்பருப்பு 1/4 கப்
  5. பாதாம் 15
  6. தண்ணீர் 3/4 கப்

வழிமுறைகள்

  1. தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு அரைத்து கெட்டியான பால் எடுக்கவும்
  2. கருப்பட்டியை தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டி வைக்கவும்
  3. பாசிப்பருப்பை வெறும் வாணலியில் இளஞ் சிவப்பாக வறுத்து வைக்கவும்
  4. பாதாமை சுடுதண்ணீரில் ஊறவிட்டு தோல் உரித்து துருவி வைக்கவும்
  5. தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்
  6. முதலில் நான்ஸ்டிக் தவாவில் தேங்காய் பால் அரிசி மாவு கருப்பட்டி கரைசல் பாசிப்பருப்பு சேர்த்து ஒரு விஸ்கால் நன்கு கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
  7. பின் அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும்
  8. அரிசி மாவு சேர்த்து இருப்பதால் கண்டிப்பாக தொடர்ந்து தீயை குறைத்து வைத்து கைவிடாமல் கிளறவும்
  9. நன்கு திரண்டு உருண்டு வரும்
  10. தொடர்ந்து கிளறி கொண்டே இருந்தால் தேங்காய் பாலில் உள்ள எண்ணெய் கசிந்து பந்து போல் சுருண்டு வரும் போது இறக்கவும்
  11. சிறிது நெய் தடவி ரெடியா உள்ள ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்
  12. பின் துருவிய பாதாமை தூவி நன்கு கரண்டியால் அழுத்தி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்