வீடு / சமையல் குறிப்பு / ஸ்டீம்டு கேரட் - பீட்ரூட் ரைஸ் கேக்

Photo of Steamed Carrot-beetroot Rice Cake by pavumidha arif at BetterButter
503
1
0.0(0)
0

ஸ்டீம்டு கேரட் - பீட்ரூட் ரைஸ் கேக்

Oct-07-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்டீம்டு கேரட் - பீட்ரூட் ரைஸ் கேக் செய்முறை பற்றி

தேனி மாவட்டம் ருசியான உணவு.குழந்தைகளுக்கு சத்துக்கள் நிறைந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி அரசி 1 கப்
  2. கேரட் 3
  3. பீட்ரூட் 1
  4. தேங்காய் துருவல் 1/2 கப்
  5. ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
  6. சக்கரை 1/2 கப்
  7. நெய் 2 டீஸ்பூன்
  8. பாதாம் 4
  9. முந்திரி 5
  10. உலர்பழ பொடி 1 டீஸ்பூன்
  11. உப்பு 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் இட்லி அரிசியை 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
  2. பின்னர் கேரட் மற்றும் பீட்ரூட் தனி தனியாக அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்.
  3. இட்லி அரிசியை நன்றாக அரைத்து கொள்ளவும். இதனை இரண்டாக பிரித்து கொண்டு ஒன்றில் கேரட் சாறு மற்றும் மற்றொரு மாவில் பீட்ரூட் சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பின்னர் கேரட் மாவில் ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் துருவல்,உப்பு மற்றும் சக்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. இதேபோல் பீட்ரூட் மாவில் ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் துருவல்,உப்பு மற்றும் சக்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  6. தட்டில் நெய் தடவி இதை இரண்டையும் தனி தனியாக ஊற்றவும்.பின் இதற்கு மேல் பாதாம் மற்றும் முந்திரி போடவும்.
  7. உலர்பழ பொடி லேசாக தூவி விடவும்.இப்போது இட்லி பாத்திரத்தில் இதனை வைத்து 20-25 நிமிடம் குறைந்த தீயில் ஆவியில் வேக விடவும்
  8. பின்னர் தட்டை எடுத்து விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.
  9. சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்டீம்டு கேரட்-பீட்ரூட் ரைஸ் கேக் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்