வீடு / சமையல் குறிப்பு / மட்டன் லக்மி

Photo of Mutton lukhmi by Rashitha Mufeed at BetterButter
435
0
0.0(0)
0

மட்டன் லக்மி

Oct-07-2018
Rashitha Mufeed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் லக்மி செய்முறை பற்றி

Hyderabad special snacks in tamil.lukhmi is one of the famous street food in hyderabad. The outer layer of the lukhmi is crispy and fluffy while the inner layers contain the meat mix which is soft and delectable. Popularly served at all Hyderabadi weddings.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஹைதராபாத்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துண்டு துண்டாக நறுக்கிய கறி -300 gm.      
  2. மைதா மாவு -2 கப்.
  3. வெண்ணெய்- 150 gm.
  4. உப்பு - தேவையான அளவு
  5. எலுமிச்சை சாறு -1 மேசை கரண்டி.
  6. வெங்காயம்- 1
  7. இஞ்சி பூண்டு விழுது- 1/2 தேக்கரண்டி
  8. எண்ணெய் - தேவையான அளவு    
  9. மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
  10. பச்சை மிளகாய் - 3 எண்ணம்.
  11. கொத்தமல்லி பொடி -1/2 தேக்கரண்டி
  12. கரம் மசாலா- 1/4 தேக்கரண்டி
  13. மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
  14. புதினா இலை -1/2 கொத்து
  15. கொத்தமல்லி இலை- 1/2 கொத்து

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா  மாவு, வெண்ணெய், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அதை நன்றாக கலக்கி திடமான பதத்தில் சிறிது நேரம் வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இதமான  சூட்டில் நறுக்கிய வெங்காயம், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை மணம் போகும் வரை வதக்கவும்
  3. இப்போது மஞ்சள் தூள், நறுக்கிய பச்சை மிளகாய் , கொத்தமல்லி்  தூள் , மிளகாய் தூள், புதினா இலைகள், நறுக்கிய  கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நறுக்கிய இறைச்சியைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் இறைச்சி வேகும் வரை வதக்கவும்.
  4. இதை ஒரு தட்டில் வைத்து அது  குளிர்ச்சியாகும் வரை வைக்கவும்.
  5. பின்னர் இதை செவ்வக வடிவில் வெட்டிக் கொள்ளவும். பின்னர் அதில் வெண்ணெய் தடவிக் கொள்ளவும்
  6. இதை‌ நன்றாக மடக்கி ஈரத் துணி கொண்டு மூடி 20 நிமிடம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இதே செய்முறையை மீண்டும் செய்யவும்
  7. பின்னர் இதை செவ்வக வடிவில் சுருட்டி சதுர வடிவில் வெட்டிக் கொள்ளவும். பின்னர் நான்கு பக்கமும் தண்ணீர் வைத்து மூடி கொள்ளவும்.
  8. பின்னர் சூடான எண்ணெயில் நன்றாக பொறித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்