வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு சீயம்

Photo of Chettinad Seeyam by Juvaireya R at BetterButter
515
1
0.0(0)
0

செட்டிநாடு சீயம்

Oct-07-2018
Juvaireya R
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு சீயம் செய்முறை பற்றி

உணவுக்கு பிரபலமான செட்டிநாடு வட்டாரத்தில் மிகவும் பிரபலமானது இனிப்பு சீயம் , இரண்டு வகை உள்ளது அதில் இது இனிப்பு சீயம் ஆகும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பச்சரிசி 1 கப்
  2. உளுந்து 3/4 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. வெல்லம் 1/4 கப்
  5. பொட்டுக்கடலை 1/2 கப்
  6. ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  7. தேங்காய்த்துருவல் 2 தேக்கரண்டி
  8. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் உளுந்தை நன்றாக கழுவி 2 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்
  2. இரண்டு மணி நேரம் கழித்து அரிசி மற்றும் உளுந்தை மின்கலவையின் உதவியால் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. அரைத்த மாவினை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்
  4. சிறிதளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி இட்லிமாவு பதத்திற்கு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்
  5. பொட்டுக்கடலை மற்றும் வெல்லம் இரண்டையும் மின் கலவையில் பொடித்துக் கொள்ள வேண்டும்
  6. அதனை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் தேங்காய் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
  7. பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்
  8. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்
  9. எண்ணெய் நன்கு காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளை மாவில் தோய்த்து அதனை எண்ணெயில் போட்டு பொறிக்கவும்.
  10. சியம் பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடித்து தட்டிற்கு மாற்றவும்
  11. சூடான செட்டிநாட்டு சிஎம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்