வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு அவல் கஞ்சி

Photo of Red flakes porridge by Yasmin Shabira at BetterButter
301
0
0.0(0)
0

சிவப்பு அவல் கஞ்சி

Oct-07-2018
Yasmin Shabira
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு அவல் கஞ்சி செய்முறை பற்றி

இது எங்கள் முத்துப்பேட்டையில் பரவலாக செய்யப்படும் காலை நேர பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • அக்கம்பனிமென்ட்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிவப்பு அவல் : 2 கப்
  2. தேங்காய் : 1 பெரியது
  3. வெல்லம் : 200 கிராம்
  4. ஏலக்காய் பொடி : 1/4 தேக்கரண்டி
  5. உப்பு : 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அவலை நன்றாக அலசி ஐந்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. தேங்காயை துறுவி அரைத்து பால் பிழிந்து முதல் பால் தனியாகவும் இரண்டாவது மூன்றாவது தண்ணி பால் தனியாகவும் வைத்துகொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணி பால் மற்றும் ஊற வைத்த அவலை சேர்த்து தேவையெனில் சிறிது தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் மூடி போட்டு வேகவிடவும்
  4. அவல் நன்றாக வெந்ததும் ஏலக்காய் பொடி, பொடித்த வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் குறைந்த தீயில் வேகவிடவும்
  5. வெல்லம் நன்றாக கரைந்து ஒன்று சேர்ந்ததும் கெட்டி தேங்காய் பாலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  6. தேவையெனில் முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்... சேர்க்காமலும் சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்