வீடு / சமையல் குறிப்பு / சாளியல் கஞ்சி (இனிப்பு)

Photo of Flax seed porridge ( Dessert) by Asiya Omar at BetterButter
147
0
0(0)
0

சாளியல் கஞ்சி (இனிப்பு)

Oct-08-2018
Asiya Omar
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

சாளியல் கஞ்சி (இனிப்பு) செய்முறை பற்றி

எங்கள் ஊரில் சத்தான சுவையான இந்தக் கஞ்சி பாரம்பரியமாக செய்து பரிமாறுவது வழக்கம். புது பொண்ணு மாப்பிள்ளை, பிள்ளைதாச்சிகள்,பிரசவித்த தாய்மார்கள் இவர்களுக்கு ஸ்பெஷலாக செய்து கொடுப்பார்கள்.

செய்முறை டாக்ஸ்

 • కఠినము
 • ఇతర
 • తమిళనాడు
 • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

 1. சாளியல் - 50 கிராம்
 2. வெள்ளை உளுந்து -200 கிராம்
 3. நாட்டு சர்க்கரை அல்லது சீனி -கால் கிலோ
 4. காய்ச்சிய பசும்பால் - 1 லிட்டர்
 5. நெய் -1 மேஜைக்கரண்டி
 6. விரும்பினால் - 1 அல்லது 2 நாட்டுக்கோழி முட்டை.

வழிமுறைகள்

 1. சாளியலை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். விரும்பினால் ஊறிய பின்பு லேசாக மிக்ஸி ஜாரில் பாதியாக உடையும் படி ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். உளுந்தையும் 2 மணி நேரம் ஊற விட்டு வைக்கவும். அரைக்க வேண்டாம்.
 2. சாளியல்,உளுந்து இரண்டையும் ஒரு 5 லிட்டர் குக்கரில் பாதியளவு தண்ணீர் சேர்த்து மீடியம் நெருப்பில் 10-15 நிமிடம் வெந்து எடுக்கவும்.கொழ கொழன்னு இருக்கும்.நமக்கு சுவை சத்து தான் முக்கியம்.குக்கரில் தான் காய்ச்ச வேண்டும் என்றில்லை,பானையிலும் காய்ச்சலாம். பொங்கும்,நிதானமாக பக்குவமாக காய்ச்ச வேண்டும்.
 3. அத்துடன் காய்ச்சிய ஒரு லிட்டர் பால் சேர்க்கவும். நாட்டுச்சர்க்கரை அல்லது சீனி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
 4. (அடுப்பை சிம்மில் வைத்து விரும்பினால் முட்டையை உடைத்து கொடி போல் ஊற்றவும்). 2 நிமிடம் வெந்து விடும்.
 5. எல்லாம் ஒன்று சேர்ந்த பின்பு நெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
 6. ஒரு பவுல் அல்லது தம்ளரில் விட்டு பரிமாறவும். இது முட்டை சேர்க்காமல் நாட்டு சர்க்கரை சேர்த்து முட்டை கூட சாப்பிடாத வெஜ் பிரியர்களுக்காக செய்தது. சுவையான சாளியல் கஞ்சி தயார்.
 7. இது சீனி சேர்த்து ,முட்டையும் சேர்த்து சுவையாக செய்த பரிமாறிய பொழுது.
 8. இனிப்பு கால் கிலோ சொல்லியிருக்கிறேன்,300-350 கிராம் வரைக்கும் சேர்க்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்