வீடு / சமையல் குறிப்பு / சென்னை ரோட்டுக் கடை ஸ்டைல் சிக்கன் நூடுல்ஸ்

Photo of Chennai street food style chicken noodles by hajirasheed haroon at BetterButter
1167
1
0.0(0)
0

சென்னை ரோட்டுக் கடை ஸ்டைல் சிக்கன் நூடுல்ஸ்

Oct-08-2018
hajirasheed haroon
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சென்னை ரோட்டுக் கடை ஸ்டைல் சிக்கன் நூடுல்ஸ் செய்முறை பற்றி

சென்னையில் ரோட்டுக்கடை ரொம்ப பேமஸ் அதுல ஒன்று சிக்கன் நூடுல்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் பொரிக்க தேவையான பொருட்கள்
  2. போன்லெஸ் சிக்கன் கால் கிலோ
  3. சிக்கன் பவுடர் 1 பாக்கெட்
  4. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  5. மைதா மாவு ஒரு டேபிள்ஸ்பூன்
  6. உப்பு ஒரு பின்ச்
  7. சிவப்பு நிற கேசரி பவுடர் 1 pinch
  8. நூடுல்ஸ் ஒரு பாக்கெட்
  9. முட்டை 2
  10. கோஸ் 1 கப்
  11. பீன்ஸ் கேரட் 1கப்
  12. வெங்காயம்-2
  13. உப்பு ஒரு பின்ச்
  14. சோயா சாஸ் 2 டேபிள் ஸ்பூன்
  15. பெப்பர் தூள் 3 டேபிள் ஸ்பூன்
  16. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
  17. என்னை 100 மில்லி

வழிமுறைகள்

  1. சிக்கன் செய்ய ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது சிக்கன் சில்லி பவுடர் மைதா மாவு கேசரி பவுடர் உப்பு சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  3. நூடுல்சை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எண்ணெய் அரை டீஸ்பூன் உப்பு போட்டு வேகவைத்து உதிரி உதிரியாக எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்
  4. வெங்காயம் கோஸ் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  5. அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் கோஸ் பீன்ஸ் கேரட் சேர்த்து நன்கு வதக்கவும் இதனுடன் முட்டை உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் பிறகு வேக வைத்த நூடுல்ஸ் சிக்கன் துண்டுகள் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும் கடைசியாக சோயா சாஸ் பெப்பர் தூள் சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்