வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி கொத்து

Photo of Inji kothu by Vahitha Hasan at BetterButter
1716
1
0.0(0)
0

இஞ்சி கொத்து

Oct-08-2018
Vahitha Hasan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி கொத்து செய்முறை பற்றி

அம்மா பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாரம்பரியமாக செய்யப்படும் மாலை தீனி

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஒரு கிலோ மைதா
  2. 1/4 கிலோ வெள்ளை சர்க்கரை
  3. 200 கிராம் நெய்
  4. ஒரு மேசைக்கரண்டி ஏலக்காய் பொடி
  5. 1 முட்டை
  6. ஒன்று தேங்காயில் இருந்து எடுத்த முதல் பால்
  7. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு அகன்ற கோப்பையில் மைதாவை எடுத்துக்கொண்டு நெய்யை சூடாக்கி அதில் ஊற்றி ஒரு கரண்டி கொண்டு நன்றாக கிளறி விடவும்
  2. பின்பு அதனுடன் ஏலக்காய் பொடித்த சர்க்கரை உப்பு மற்றும் தேங்காய் பால் ஊற்றி சப்பாத்தி மாவு போல சற்று இறுக்கமாக பிசைந்து கொள்ளவும்
  3. பிசைந்த மாவை நான்கு பகுதிகளாக பிரித்துக் கொண்டு ஒரு பகுதியை மட்டும் எடுத்து பூரிக்கட்டையை கொண்டு 0.3 சென்டி மீட்டர் தடிமனுள்ள பகுதியாக தட்டிக் கொள்ளவும்
  4. பின்பு அதை 3 சென்டிமீட்டர் அகலம் மற்றும் 5 சென்டிமீட்டர் நீளம் உள்ள சிறு சிறு பகுதிகளாக வெட்டிக் கொள்ளவும்
  5. அதில் ஒரு சிறு துண்டை எடுத்துக்கொண்டு நடுப்பகுதியில் நீளவாக்கில் ஓட்டை போடவும்
  6. பின்பு அதன் இரண்டு ஓரங்களையும் ஓட்டையினுள்ளே ஒட்டு வெளிப்புறமாக இழுத்து எடுக்கவும்
  7. அல்லது தங்களுக்கு விருப்பமான வடிவங்களில் வெட்டிக் கொள்ளலாம்
  8. இதேபோன்று மீதமுள்ள மாவிலும் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்
  9. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தயார் செய்து வைத்த மாவு துண்டுகளை ஒவ்வொன்றாக பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்
  10. பொரித்த துண்டுகளை சூடான தேநீருடன் சேர்த்து பரிமாறவும்
  11. தயார் செய்து இஞ்சிக்கொத்து காற்று புகாத டப்பாவில் போட்டு ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்